Connect with us
mgr

Cinema History

பாலைவனத்தில் ஆயிரம் பேரை காப்பாற்றிய எம்.ஜி.ஆர்!.. அடிமைப்பெண் படப்பிடிப்பில் நடந்த சம்பவம்!..

60களில் தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக இருந்தவர் எம்.ஜி.ஆர். நாடகங்களில் பல வருடங்கள் நடித்துவிட்டு ராஜகுமாரி திரைப்படம் மூலம் சினிமாவில் ஹீரோவாக நடிக்க துவங்கியவர். அந்த படத்திற்கு முன் சுமார் 10 வருடங்கள் எம்.ஜி.ஆர் சின்ன சின்ன படங்களில் நடித்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது.

நாடோடி மன்னன் திரைப்படத்தின் வெற்றி அவரை முன்னணி ஹீரோவாக மாற்றியது. அவருக்கென ரசிகர்களும் உருவானார்கள். தொடர்ந்து பல சரித்திர படங்களில் நடித்தார். ‘எம்.ஜி.ஆருக்கு அது மட்டுமே செட் ஆகும். ஜனரஞ்சக கதைகளில் அவரால் ஸ்கோர் செய்ய முடியாது’ என சினிமா உலகில் பேசினார்கள்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இருந்தபோது பாக்கியராஜுக்கு வந்த சி.எம். ஆசை!.. அட பாவமே!..

ஆனால், எம்.ஜி.ஆர் ஜனரஞ்சக படங்களிலும் பட்டையை கிளப்பினார். அவரின் படங்கள் பெரும்பாலும் கம்யூனிச சிந்தனைகளை அடிப்படையாக வைத்து உருவாகும். ஏழைகளை பணக்கார முதலாளி ஒருவர் சுரண்டி பிழைப்பார். பணக்கார வீட்டில் இருந்தாலும் அங்கிருந்து வெளியேறி ஏழை மக்களோடு குடிசையில் வசித்து அவர்களுக்காக எம்.ஜி.ஆர் போராடுவார். தவறுகளை தட்டி கேட்பார். அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுப்பார்.

அதுதான் எம்.ஜி.ஆரை நாட்டின் முதலமைச்சராகவும் மாற்றியது. எம்.ஜி.ஆர் எப்போதும் மற்றவர்களின் பிரச்சனைகளை புரிந்துகொள்ளும் மனிதராகவே இருந்திருக்கிறார். அவருக்கு தெரிந்து யாருக்கு என்ன பிரச்சனை என்றாலும் உடனே அதுபற்றி விசாரித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தவர் அவர்.

இதையும் படிங்க: பாடல் வரிகளால் வந்த கோபம்!.. படப்பிடிப்பை நிறுத்திய எம்.ஜி.ஆர்!… அட அந்த படமா!…

தனக்கு தெரிந்தவர்கள் மட்டுமல்ல. சாலையில் காரில் போகும்போது யாரேனும் கஷ்டப்படுவதை பார்த்தாலும் உடனே அதுபற்றி விசாரித்து பணத்தை அள்ளி கொடுத்துவிட்டுதான் அங்கிருந்து செல்வார். அதனால்தான் அவரை வள்ளல் என எல்லோரும் அழைத்தார்கள். கே.சங்கர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடித்து உருவான திரைப்படம்தான் அடிமைப்பெண்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பாலைவனத்தில் நடந்தது. 1000 ஓட்டகங்களை வைத்து காட்சிகளை எடுத்துக்கொண்டிருந்தார் இயக்குனர்.ஒட்டகங்களுக்கும், ஒட்டகங்களை ஓட்டுபவர்களுக்கு சேர்த்து ஒரு நாள் 4 லாரி தண்ணீர் தேவைப்பட்டது. அதுவும் சரியாக கிடைக்கவில்லை. எப்படியோ சமாளித்து படப்பிடிப்பு நடந்து வந்தது. ஒருநாள் தண்ணீர் மிகவும் குறைவாக இருந்தது. எனவே, ஒட்டகங்களும், ஓட்டக ஓட்டிகளும் போதுமான தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டனர்.

நிலைமையை உணர்ந்த எம்.ஜி.ஆர் யாரும் தாகத்தில் கஷ்டபடக்கூடாது என களத்தில் இறங்கி மாற்று திட்டத்தை யோசித்தார். 4 லாரிகள் வந்தது. ஆனால், அதில் இருந்தது தண்ணீர் இல்லை. அப்போது பிரபலமாக இருந்த ஒரு கோலோ குளிர்பானம். அன்று ஒட்டகங்களும், ஒட்டக ஓட்டிகளும் கோலோ குளிர் பானம் அருந்தினார்கள். படப்பிடிப்பும் சரியாக நடந்தது. இது ஏதோ கட்டுக்கதை போல தோன்றும். ஆனால், இயக்குனர் கே.சங்கர் இதை ஒரு நூலில் பதிவு செய்திருக்கிறார் என்பதே உண்மை.

google news
Continue Reading

More in Cinema History

To Top