காப்பியடிப்பது என்பது எந்த துறையில் அதிகமா இல்லையோ சினிமா துறையில் மிகவும் அதிகம். பல வருடங்களுக்கு முன்பே வெளியான படங்களிலிருந்து காட்சிகளை காப்பி அடித்து அப்படியே வைத்துவிடுவார்கள். அதுவும் தமிழ் மொழி படமாக இருந்தால் கண்டுபிடித்துவிடுவார்கள் சீன, ஜப்பான், ஈரான், கொரியன், ஆங்கிலம் போன்ற உலக நாடுகளின் மொழிகளின் திரைப்படங்களில் இருந்து கூட கதையையும், காட்சிகளையும் சுட்டு இங்க படம் எடுத்திருக்கிறார்கள்.
1950 முதல் 90 வரை பல ஆங்கில படங்களின் கதைகளையும், ஆங்கில நாவல்களையும் சுட்டு தமிழ் படமாக எடுத்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் நடித்த அன்பே வா படம் கூட ஒரு ஆங்கில நாவல்தான். அது அங்கு திரைப்படமாகவும் வெளிவந்தது. அப்போதெல்லாம் காப்பிரைட் என்பது இவ்வளவு சீரியசாக இருந்ததில்லை.
ரசிகர்களாலும் அதை கண்டுபிடிக்க முடியாது. இப்போது எல்லோர் கையிலும் ஸ்மார்ட் போன் வந்து பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் வந்துவிட்டதால் ஒரு இயக்குனர் எந்த படத்திலிருந்து காட்சியை காப்பியடித்திருக்கிறார், எந்த படத்தின் போஸ்டரை பார்த்து போஸ்டரை டிசன் செய்திருக்கிறார்கள் என்பதை ரசிகர்கள் சுலபமாக கண்டுபிடித்து தெரியப்படுத்திவிடுகிறார்கள். ஆனால் அப்போதெல்லாம் அப்படி இல்லை.
இந்நிலையில்தான் 1963ம் வருடம் நீதிக்குப் பின் பாசம் என்கிற படத்தில் எம்ஜிஆர் நடித்த ஒரு காட்சியை அப்படியே தூக்கி 2022ல் விஜய் நடித்து வெளியான தமிழன் படத்தில் அப்படத்தின் இயக்குனர் வைத்திருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. அந்த வீடியோவை பிரபல யுடியூப் விமர்சகர் புளூசட்டை மாறன் தனது எக்ஸ தளத்தில் பகிர்ந்து 2002ல் வெளியான தமிழன் படத்திலிருந்து காட்சியை 1963ல் அந்த இயக்குனர் சுட்டு படம் எடுத்திருக்கிறார்’ என நக்கலடித்திருக்கிறார்.
Copy – Right:
— Blue Sattai Maran (@tamiltalkies) December 5, 2025
2002 இல் வெளியான 'தமிழன்' படத்தில் இயக்குனர் மஜீத் கஷ்டப்பட்டு உருவாக்கிய காட்சியை.. 1963 இல் 'நீதிக்குப்பின் பாசம்' படத்தில் அப்படியே வைத்த இயக்குனர் எம்.ஏ.திருமுகம் மற்றும் விஜய் நடித்த இந்த சீனில் நடித்த MGR.. இருவருக்கும் கண்டனங்கள்.pic.twitter.com/1IGW6EbqqI
