திரையுலகில் முடிசூடா மன்னனாக இருந்தவர் எம்.ஜி.ஆர். நாடகங்களில் நடிக்க துவங்கி அப்படியே சினிமாவுக்குள் வந்தவர். சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து ஒரு கட்டத்தில் ஆக்ஷன் ஹீரோவாக மாறி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். சினிமாவில் நல்ல கருத்துக்களை சொல்லி மக்களை தன் பக்கம் வளைத்தவர். ஏழைகளின் பங்களானாக பல படங்களில் நடித்து தமிழகத்தின் முதலமைச்சராகவும் மாறினார்.
அதேபோல் எம்.ஜி.ஆர் மிகவும் இரக்க சுபாவம் உள்ளவர். உதவும் குணம் கொண்டவர். இதற்கு உதாரணமாக பல சம்பவங்கள் நடந்ததுண்டு. எம்.ஜி.ஆரை பார்க்க எப்போதும் ரசிகர்கள் அவரின் வீட்டுக்கு வருவார்கள். எனவே, 24 மணி நேரமும் அவரின் வீட்டிற்கு வருபவர்களுக்கு உணவு வழங்கப்படும். இதற்காக இரண்டு சமையல்காரர்கள் மாறி மாறி வேலை செய்வார்கள். அதேபோல், எம்.ஜி.ஆர் மற்றும் அவரின் மனைவி உள்ளிட்ட சிலருக்கு சமையல் செய்ய ஒரு சமையல்காரர் வீட்டில் இருப்பார்.
ஒருமுறை எம்.ஜி.ஆர் சாப்பிட அமர்ந்தபோது ஓடிவந்த அவரின் சமையல்காரார் அவரின் காலை பிடித்து ‘என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் உணவில் விஷம் வைத்துவிட்டேன். யாராரோ என்னிடம் பேசி என் மனதை மாற்றி இதை செய்ய வைத்துவிட்டனர். என்னை மன்னித்து விடுங்கள்’ என கதறினார்.
உடனே சில லட்சம் பணத்தை அவரிடம் கொடுத்து எதாவது தொழில் செய்து பிழைத்துக்கொள் என சொல்லி அவரை எம்.ஜி.ஆர் அனுப்பிவிட்டார். அங்கிருந்தவர்கள் ‘உங்களின் உணவில் விஷம் வைத்துள்ளான். அவனுக்கு போய் இவ்வளவு பணம் கொடுத்து அனுப்புகிறீர்களே’ என சொல்ல அதற்கு எம்.ஜி.ஆர் ‘இத்தனை நாட்கள் எனக்கு சமையல் செய்தான். இப்போது இங்கிருந்து சென்றுவிட்டால் அவனுக்கு மீண்டும் சமையல் வேலையை யாரும் தரமாட்டார்கள். அப்படி நடந்தால் அவன் சாப்பாட்டுக்கு என்ன செய்வான். அதனால், வேறு எதாவது தொழில் செய்து பிழைத்துக்கொள்ளட்டும் என நினைத்து உதவி செய்தேன்’ என சொன்னாராம்.
தன்னை கொல்ல நினைத்தவன் மீதும் இரக்கம் காட்டிய எம்.ஜி.ஆரின் செயலை நினைத்து அங்கிருந்தவர்கள் நெகிழ்ந்து போனார்களாம். இந்த தகவலை இயக்குனர் பாக்கியராஜ் ஒரு மேடையில் பேசியது குறிப்பிடத்தக்கது.
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…
தமிழ் சினிமாவில்…
மாநாடு படம்…
போடா போடி…