வெற்றி பெற்றால் நான் மன்னன்.. தோல்வி அடைந்தால் நாடோடி!.. ரசிகர்களுக்கு எம்.ஜி.ஆர் வைத்த டாஸ்க்!..
எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆரே இயக்கி நடித்த திரைப்படம்தான் “நாடோடி மன்னன்”. இப்படத்திற்குப் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. எம்.ஜி.ஆர் அவரே தயாரித்து, இயக்கி நடித்த முதல் திரைப்படமாகும். மேலும், எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்த முதல் திரைப்படமும் இப்படமாகும்.
எம்ஜிஆரின் திரைப்பட வாழ்கையில் “நாடோடி மன்னன்” ஒரு மையில் கல்லாக அமைந்தது. முதல் பாதி கருப்பு - வெள்ளையிலும் இடைவேளைக்குப் பிறகு கலர் படம் ஆகவும் எடுக்கப்பட்டது. அந்த காலங்களில் கேமரா தொழில் நுட்பம் இன்றளவும் வளர்ச்சி அடையாத போது கூட இரண்டு எம்.ஜி.ஆர்களும் ஒரே காட்சியில் நடிப்பது போல பல காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றன.
ரசிகர்களின் ஆரவாரத்தை பல காட்சிகள் தொடர்ந்து பெற்றன. தன்னிடம் இருந்த மொத்த பணத்தையும் இப்படத்திற்காக செலவழித்தார் எம்.ஜி.ஆர். இந்த படம் வெளியாகும் போது இப்படம் தோல்வி அடைந்தால் நான் “நாடோடி”,வெற்றி பெற்றால் நான் “மன்னன்” என்று எம்.ஜி.ஆர் கூறினார்.
திரையரங்குகளில் முதல் காட்சி பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்கள் தலைவா நீங்க நாடோடியும் இல்லை, மன்னனும் இல்லை நீங்கள் மன்னாதி மன்னன் என்று எம்ஜிஆரைப் பாராட்டிப் புகழ்ந்தனர். நாடோடி மன்னன் வெற்றி பெற்று எம்.ஜி.ஆரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. மிகப்பெரிய தொகையான ஒரு கோடியே 80 லட்சம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிசில் ரூ.11 கோடி வசூலைப் படைத்தது. இந்த வசூல் எம்.ஜி.ஆரின் அரசியல் எழுச்சிக்கும் மாபெரும் துணையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது..
இதையும் படிங்க: சூப்பர்ஸ்டாருக்கு திடீரென வந்த ஆசை!.. உடனே அனுப்பிய மயில்சாமி!.. என்னா மனுஷன்யா!..