எம்.ஜி.ஆருக்கு பாதை அமைத்துக்கொடுத்த சிவாஜி கணேசனின் தீவிர ரசிகர்… இப்படியெல்லாம் நடந்திருக்கா!!

MGR and Sivaji Ganesan
தமிழ் சினிமா தொடங்கிய காலகட்டத்தில் புராண திரைப்படங்களும் சரித்திரத் திரைப்படங்களும்தான் அதிகமாக உருவாகின. இந்த காலகட்டத்தில் சமூக திரைப்படங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிவந்திருந்தாலும், சினிமா துறையினர் சமூக படங்களை இயக்க தொடக்கத்தில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.
அதன் பின் ஒரு காலகட்டத்திற்கு பிறகு சமூக திரைப்படங்கள் எக்கச்சக்கமாக வெளிவரத் தொடங்கின. ஆனாலும் எம்.ஜி.ஆருக்கு சமூக திரைப்படங்களில் நடிப்பதில் ஒரு தயக்கம் இருந்ததாம். அவர் நடித்த ஒன்றிரண்டு சமூகத் திரைப்படங்கள் வெற்றிப்பெறவில்லை. ஆதலால்தான் அவருக்கு அந்த தயக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. எனினும் அவரது சமகாலத்து நடிகரான சிவாஜி கணேசன் சமூகத் திரைப்படங்கள் பலவற்றிலும் நடிக்கத் தொடங்கிவிட்டாராம்.

MGR
அதே போல் ஒரு கட்டத்தில் சமூக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றால் ஃபீல்ட் அவுட் ஆகிவிடும் நிலைமையும் வந்தது. ஆதலால் எம்.ஜி.ஆரின் நண்பர்கள் பலரும் அவரை சமூக திரைப்படங்களில் நடிக்குமாறு வற்புறுத்தி வந்தனராம்.
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும், கதாசிரியருமாக திகழ்ந்த சின்ன அண்ணாமலை, “சக்ரவர்த்தி திருமகன்” படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆருடன் மிக நெருக்கமாக பழகி வந்தார். அப்போது ஒரு நாள் எம்.ஜி.ஆரிடம் “நீங்கள் ஏன் சமூக திரைப்படங்களில் நடிக்க மாட்டிக்கிறீர்கள்? சமூக திரைப்படங்களில் நீங்கள் நடித்தீர்கள் என்றால் நிச்சயமாக வெற்றிப்பெறுவீர்கள். எதற்கு இப்படி தயங்குகிறீர்கள்?” என கேட்டாராம்.

Chinna Annamalai
அதற்கு எம்.ஜி.ஆர், “நல்ல கதை இருந்தால் கூறுங்களேன். நடிக்கலாம்” என கூற, அப்போது சின்ன அண்ணாமலை “பாக்கெட் மார்” என்ற ஹிந்தி திரைப்படத்தை எம்.ஜி.ஆரை வைத்து ரீமேக் செய்யலாம் என முடிவெடுத்தாராம். அப்படி அவர் நடித்த சமூக திரைப்படம்தான் “திருடாதே” என்ற திரைப்படம். எனினும் இத்திரைப்படம் மிக தாமதமாக வெளிவந்தது.
இதையும் படிங்க: நாடக மேடையில் சொந்த டயலாக்கை கூறி அண்ணாவை மடக்கிய கண்ணதாசன்… ஆனால் பேரறிஞர் என்ன பண்ணார் தெரியுமா??

Thirudathey
“திருடாதே” திரைப்படத்தின் வெற்றிதான் எம்.ஜி.ஆரை சமூக திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பதற்கான உத்வேகத்தை கொடுத்ததாம்.

Sivaji Ganesan and Chinna Annamalai
இத்திரைப்படத்தின் கதாசிரியரான சின்ன அண்ணாமலை பின்னாளில் சிவாஜி கணேசனின் ரசிகர் மன்றத் தலைவராக ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.