ஜெயலலிதாவிற்காக மாடியிலிருந்து விழுந்த எம்ஜிஆர்!.. இது எப்ப நடந்துச்சு தெரியுமா?...
தமிழ் சினிமாவில் நடிகர் என்ற அந்தஸ்தையும் தாண்டி ஒரு நல்ல மனிதாபிமானம் உள்ள நடிகராக திகழ்ந்து வந்தார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். சதிலீலாவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமான எம்ஜிஆர் என்.எஸ்.கிருஷ்ணனை தன் மானசீக குருவாக சினிமாவில் ஏற்றுக் கொண்டார்.
எம்ஜிஆர் இத்தனை சிறப்புமிக்க மனிதராக கொடை வள்ளலாக மக்கள் விரும்பும் ஒரு அரசியல் தலைவராக இன்றளவும் பேசப்படுகிறார் என்றால் அதற்கு ஒரு காரணமாக இருப்பவர் என்.எஸ்.கே.தான். ஏனெனில் அவரை பார்த்து பார்த்து சினிமாவில் வளர்ந்தவர்தான் எம்ஜிஆர்.
இந்த நிலையில் எம்ஜிஆரின் சிறந்த மனிதாபிமான செயலுக்கு ஒரு உதாரணமான சம்பவத்தை சித்ராலட்சுமணன்
தனது யுடியூப் சேனலில் கூறினார். எம்ஜிஆர் , ஜெயலலிதா நடிப்பில் பல படங்கள் வெளிவந்திருக்கின்றன.கிட்டத்தட்ட 28 படங்களில் எம்ஜிஆருக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்திருக்கிறார்.
அந்த வகையில் குறிப்பிட்ட படமாக கருதப்படுவது ‘கண்ணன் என் காதலன்’ என்ற திரைப்படம். அந்த திரைப்படத்தில் ஜெயலலிதா நடக்க முடியாத ஒரு ஊனமாக நடித்திருப்பார். முக்கால் வாசி படத்தில் ஜெயலலிதா வீல்சேரில் அமர்ந்தவாறே இருப்பார். இந்தப் படத்தை ப. நீலகண்டன் இயக்கியிருந்தார்.
ஒரு சமயம் அந்த நாளின் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு புறப்பட்ட எம்ஜிஆர் ‘நீலகண்டனிடம் இன்று மதியம் என்ன காட்சி படமாக்கப் போகிறீர்கள்’ என்று கேட்டாராம். அதற்கு அவர் ‘மாடியிலிருந்து சேரில் இருந்த ஜெயலலிதா உருண்டு படியில் விழுகிற காட்சியை தான் படமாக்கப் போகிறேன்’ என்று கூறினாராம்.
அதைக் கேட்டதும் எம்ஜிஆர் ‘ஓ அப்படியா? அந்தக் காட்சியை படமாக்கும் போது கவனமாக எடுங்கள், இது ஒரு உயிர் சம்பந்தப்பட்டது’ என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு போகாமல் அன்று அந்தக் காட்சி முடியும் வரை செட்டிலேயே இருந்தாராம். அதோடு இல்லாமல் அந்தக் காட்சியை தானே நடித்து நடித்து பார்த்து ரிகர்சல் செய்து விழுந்து பார்த்தாராம்.
இதையும் படிங்க : பிரபல டான்ஸ் மாஸ்டரின் மகனின் மீது ஆசைப்பட்ட சில்க் ஸ்மிதா… ஆனால் இதில் சோகம் என்னன்னா??
அதன் பிறகே ஜெயலலிதா அந்தக் காட்சியில் நடித்திருக்கிறார். இது ஜெயலலிதாவிற்கு மட்டும் இல்லை, உயிர் சம்பந்தப்பட்ட ஏதாவது காட்சிகள் படமாக்க போகிறார்கள் என்றால் எம்ஜிஆர் அதற்கான ஆயத்தப் பணிகளை செய்வாராம். இத்தனை மாண்புமிகு நடிகரை தலைவரை இழந்து விட்டோம்.