ராதிகாவின் படப்பிடிப்பை நிறுத்திய எம்ஜிஆர்!.. ஹோட்டலில் செய்த அலப்பறையால் திக்குமுக்காடிய படக்குழு!..

mgr
1980 ஆம் ஆண்டு கலைஞானம் இயக்கத்தில் நடிகர் சுதாகர், நடிகை ராதிகா உட்பட பலரும் நடித்து வெளியான படம் தான் ‘எதிர்வீட்டு ஜன்னல் ’ திரைப்படம். இந்த திரைபடத்தில் நடிகை மனோரமா, நடிகர் சுருளிராஜன், நடிகர் ராஜராஜசோழன் போன்றோர் நடித்திருந்தனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சேலம் , ஏற்காடு மற்றும் அதனை சுற்றி இருக்கும் மலைபிரதேசங்களில் படமாக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பிற்காக ஒட்டுமொத்த படக்குழுவுக்கு சேலத்தில் இருக்கும் துர்கா ஹோட்டலில் அறை எடுத்து அனைத்து கலைஞர்களும் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

radhika
அப்போது எம்ஜிஆரின் ஆட்சி கலைக்கப்பட்டு பை எலக்ஷன் நடத்தவேண்டும் என்று கோரி ஊர் ஊராக பிரச்சாரம்
செய்து கொண்டிருந்தார் எம்ஜிஆர். அப்போது சேலம் வந்தடைந்ததும் துர்கா ஹோட்டலில் ஒரு படப்பிடிப்பிற்காக கலைஞர்கள் அறை எடுத்து தங்கியிருக்கின்றனர் என்ற தகவல் எம்ஜிஆருக்கு தெரிய வந்தது.
இதையும் படிங்க : ரஜினிக்காக கலைஞரின் படத்தை இயக்க மறுத்த இயக்குனர்!..கருணாநிதி என்ன சொன்னார் தெரியுமா?..
உடனே எம்ஜிஆரும் அதே ஹோட்டலில் அறை எடுக்க சொல்லி ஹோட்டலுக்கு செல்கிறார். அந்த சமயம் அத்தனை கலைஞர்களும் படப்பிடிப்பிற்காக ஏற்காடு செல்ல வெளியே வந்திருக்கின்றனர்.அவர்களை பார்த்ததும் எம்ஜிஆர் எங்கே செல்கிறீர்கள் என கேட்க படத்தின் இயக்குனர் கலைஞானம் படப்பிடிப்பிற்கு ஐயா என்று சொன்னாராம்.

radhika
உடனே எம்ஜிஆர் இன்றைக்கு ஒரு நாள் படப்பிடிப்பை ரத்து செய்யுங்கள் என்று சொல்ல அவர் பேச்சை மீற முடியாமல் படப்பிடிப்பையும் ரத்து செய்திருக்கின்றனர். மேலும் கலைஞானத்திடம் படத்தின் கதையை கேட்டு தெரிந்து விட்டு படப்பிடிப்பு முடிந்ததும் ஃபர்ஸ்ட் காப்பியை முதலில் என்னிடம் தான் வந்து காட்டவேண்டும் என சொல்லியிருக்கிறார்.
மேலும் கதையில் உள்ள எல்லா கதாபாத்திரங்களையும் பற்றி தெரிந்து கொண்டு நடிகர் ராஜராஜசோழனை மட்டும் அழைத்து விசாரித்தாராம். ராஜராஜசோழன் இந்த படத்தில் புதுமுகம் மேலும் படத்தின் வில்லனும் அவர் தான். அந்த நடிகரின் உடையை கழற்ற சொல்லி அவரின் உடம்பை பார்த்திருக்கிறார் எம்ஜிஆர்.

kalaignanam
என்ன உடற்பயிற்சி செய்கிறாய் நீ? இப்பொழுது நான் பண்ணுவதை பார் என்று சொல்லிவிட்டு சில பயிற்சிகளை சொல்லிக் கொடுத்தாராம். மேலும் இதே போல் இனிமேல் செய்து பார். உடம்பு நன்றாக கட்டுமஸ்தாக இருக்கும் என கூறினாராம். இந்த தகவலை கலைஞானமே தெரிவித்தார்.