அந்த சீன கண்டிப்பா சம்மதிக்க மாட்டாங்க!..மாஸ்டர் மைன்டோட யோசிச்ச எம்.ஜி.ஆர்!..வாயடைத்து நின்ன படக்குழு!..
சினிமாவை பொறுத்தவரைக்கும் ஒரு நடிகர் உச்சத்தில் இருப்பவராக இருப்பின் படக்காட்சியில் அந்த நடிகரை அடிப்பது, திட்டுவது, போன்ற சீன்களில் நடிக்க மற்ற சக நடிகர்கள் தயங்குவார்கள். ஏன் ரஜினி படமான சந்திரமுகி படத்தில் கூட ரஜினியை வீட்டை விட்டு வெளியே தள்ளுவது போன்ற சீனில் நடிக்க பிரபு போன்ற நடிகர்கள் எல்லாம் மறுத்தார்கள்.
துணிந்து நடித்தவர் நடிகர் நாசர் மட்டுமே. ரஜினிக்கே அப்படி என்றால் மக்கள் திலகம், புரட்சித்தலைவர் என்று பெருமையாக போற்றப்படும் எம்.ஜி.ஆர்னா சும்மாவா? காதல் வாகனம் என்ற படத்தில் எம்.ஜி.ஆரும் மேஜர் சுந்தராஜனும் இணைந்து நடிக்கும் காட்சி அது.
இதையும் படிங்க : தனக்குத்தானே ஆப்பு வைத்த சிவகார்த்திகேயன்!..சொன்னத கேட்டுருந்தா இப்படியெல்லாம் நடந்திருக்குமா?..
ஒரு சீன் எம்.ஜி.ஆருக்கு தந்தையாக மேஜர் நடித்திருப்பார். எம்.ஜி.ஆரை போலீஸ் கைது செய்து அழைத்துக் கொண்டு போகும் காட்சி. இதை பலமுறை ஒத்திகை பார்த்துவிட்டார்கள். டேக் ஆரம்பிக்கிறது. உண்மையான டேக்கில் திடீரென எம்.ஜி.ஆர் மேஜர் சுந்தராஜின் காலில் விழுந்து வணங்கி விட்டு போலீஸுடன் செல்வது போன்று சீனை மாற்றிவிட்டாராம் எம்.ஜி.ஆர்.
இந்த காட்சியை பார்த்த அத்தனை பேரும் ஆச்சரியத்தில் திகைக்க ‘ஏன் இப்படி செய்தீர்கள்?’ என எம்.ஜி.ஆரிடம் மேஜர் கேட்டாராம். அதற்கு பதில் சொன்ன எம்.ஜி.ஆர் ‘ நீங்கள் ஒரு நடிகராக இருந்து யோசியுங்கள். நீங்கள் மேஜராகவும் நான் எம்.ஜி.ஆராகவும் யோசிக்காதீர்கள். நீங்களும் நானும் நடிகர் தான். கதைக்கு இது மேலும் பலமாக இருக்கும்’ என்று சொல்லி மெய்சிலிர்க்க வைத்தாராம் எம்.ஜி.ஆர்.