படப்பிடிப்பில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நடிகை!.. நக்கலடித்த எம்ஜிஆர்
தமிழ் சினிமாவில் இந்த ஒரு நடிகையை யாராலும் அவ்ளோ சீக்கிரம் மறக்க முடியாது. நடிகை லட்சுமி. வெடுக்குத்தனமான பேச்சு, அசாத்தியமான நடிப்பு என ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். ஒரு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கக் கூடிய அளவிற்கு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துபவர்.தன்னுடைய முக பாவனையாலும் சிரிப்பாலும் இந்த கதாபாத்திரத்தை இவரை தவிர வேறு யாராலும் செய்ய முடியாது என்ற அளவுக்கு இருந்தவர் தான் லட்சுமி.
ஜீவனாம்சம் என்ற படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார் லட்சுமி. அதனை தொடர்ந்து பல் வரலாற்று கதையுள்ள படங்களில் தேவியாக, தேவி லட்சுமியாக அப்படியே வாழ்ந்திருப்பார். முதல் படத்திலேயே முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம். பத்திரிக்கை நண்பர்களும் அவரின் நடிப்பை பெருமளவு விமர்சித்தார்கள்.
அந்த அளவுக்கு வெகு சீக்கிரமே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் லட்சுமி. காலப்போக்கில் அம்மா, அக்கா என குணச்சித்திர கதாபாத்திரத்திலும் கச்சிதமாக பொருந்தினார். அதிலும் குறிப்பாக ஜீன்ஸ் படத்தில் ஒரு பாட்டியாக தன்னுடைய நகைச்சுவையை சொட்ட சொட்ட மெருகேற்றியிருப்பார்.
இவ்வாறு லட்சுமியை பற்றி பல செய்திகளை சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு சமயம் சத்யா ஸ்டுடியோவில் தூண்டில் மீன் என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு இரவு 1 மணியளவில் வீட்டிற்கு சென்றாராம் லட்சுமி. அப்போது கரண்ட் இல்லையாம். அதனால் காத்தாடி இல்லாமல் இரவு முழுவதும் தூங்காமல் இருந்து மறு நாள் படப்பிடிப்பிற்கு வந்தாராம் லட்சுமி. இடைவேளை சமயத்தில் ஸ்டூடியோவில் தூங்கிக் கொண்டிருந்தாராம். அப்போது திடீரென எம்ஜிஆர் செட்டிற்குள் வந்திருக்கிறாராம்.
வரும் போதே ‘இவர் பெரிய பாட்டி, தூங்கிக் கொண்டிருக்கு’ என சொன்னபடியே வந்திருக்கிறார். அப்போது அவர் குரலை கேட்டதும் லட்சுமி எம்ஜிஆர் அண்ணன் தானே என்று சொல்லியிருக்கிறார். அதற்கு எம்ஜிஆர் இல்லை அவர் அப்பன் என்று கிண்டலாக சொன்னாராம். அதன் பின் தூங்கிய காரணத்தை சொல்ல அதற்கு எம்ஜிஆர் இருக்கிறதை வைத்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும் அதுதான் நமக்கு நல்லது என்றும் எந்த நேரத்திலும் என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம் , அதற்கெல்லாம் நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என எம்ஜிஆர் கூறினாராம். இந்த செய்தி இப்போது வைரலாகி வருகின்றது.
இதையும் படிங்க :ரஜினி நடிக்க மறுத்த படம்! – ரகுவரனை வைத்து ஹிட் கொடுத்த இயக்குனர்