எம்ஜிஆருக்கு கடைசி வரை உண்மையாக இருந்த இரு பெண்கள்!.. யாருனு தெரியுமா?..
காலம் கடந்தும் இன்று வரை புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் அவர் செய்த நல்ல செயல்கள், தொண்டுகள் மற்றும் மக்கள் மேல் அவர் வைத்திருந்த அக்கறைகள் இவைகள் தான் முக்கியமான காரணம்.
இவற்றையெல்லாம் அவர் நடிக்கும் படங்களின் மூலமாகவே தான் என்ன செய்யப்போகிறேன், எப்படி இருப்பேன் என்று முன்னதாகவே ரசிகர்களுக்கு காட்டிவிட்டார். அதனாலேயே எம்ஜிஆரை தன் தலைவராக மக்கள் மிக எளிதாக ஏற்றுக் கொண்டனர். சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி ஒரு மகாத்மாவாகவே திகழ்ந்தார் எம்ஜிஆர்.
இதையும் படிங்க : மனோரமா மகன் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த எம்ஜிஆர்!.. காதல் தோல்வியில் நடந்தது என்ன தெரியுமா?..
எம்ஜிஆர் புராணங்கள் ஒரு பக்கம் பாடினாலும் அவருக்கு நிகராக இன்னொருவரை பற்றியும் பேசவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். ஜெயலலிதா தான். எம்ஜிஆருக்கு பக்க பலமாக இருந்த ஜெயலலிதாவால் சில பேருக்கு பிரச்சினைகள் இருந்திருக்கின்றன. ஜெயலலிதாவிற்கு கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டதும் அந்த அகங்காரத்துடன் தன் போக்கை மாற்றிக் கொண்டாராம் ஜெயலலிதா.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். அவர்கள் எம்ஜிஆரிடம் புகார் செய்திருக்கின்றனர். உடனே எம்ஜிஆரும் அவர் இறப்பதற்கு மூன்று நாள்கள் முன்னாடி கட்சிக்கு ஒரு அறிக்கை விட்டாராம். அந்த அறிக்கையில் இனிமேல் ஜெயலலிதாவுடன் யாரும் கட்சி சார்பாக தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்று ஒரு அறிக்கை விட்டாராம். அந்த அறிக்கை விட்ட மூன்றாவது நாளில் தான் எம்ஜிஆர் மரணமடைந்தாராம். சொல்லப்போனால் அது தான் அவர் கடைசியாக விட்ட அறிக்கையும் கூட.
இதையும் படிங்க : உயர்ந்த மனிதன் படப்பிடிப்பின் போது எஸ்.வி.சுப்பையாவிடம் படபடவென எரிந்து விழுந்த சிவாஜி….ஏன் தெரியுமா?
மேலும் அந்த சூழ் நிலையில் எம்ஜிஆர் ஜானகியின் முழுகட்டுப்பாட்டில் இருந்தாராம். உடல் நிலை சரியில்லாமல் போகவே அவரால் எதுவும் செய்யமுடியாத நிலையில் இருந்ததால் முழு அதிகாரமும் ஜானகியிடம் சென்று வர இந்த அறிக்கை கூட எம்ஜிஆரை பயமுறுத்தி கூட விட செய்திருக்கலாம் என்று சில தகவல்கள் வெளிவந்ததாம்.
இந்த நேரத்தில் தான் நடிகர் நம்பியார் அப்போது அமைச்சராக இருந்த ராஜாராமிடம் வந்து எம்ஜிஆரின் நிலைமை சூழ்நிலை மோசமாக இருக்கின்றது. அவருக்கு எதாவது செய்யக்கூடாதா என்று அழுது கேட்டாராம். மேலும் எம்ஜிஆர் குண்டடி பட்டு வீட்டில் இருக்கும் போது தான் தன்னை சுற்றி என்னவெல்லாம் நடக்கிறது என்று தெரிந்து கொண்டாராம். பணத்திற்காகத் தான் நம்மை சுற்றி இருக்கிறார்கள் அனைவரும் என அறிந்து கொண்டாராம்.
அந்த நிலையில் தான் அவருக்கு ஒரு தெளிவான முடிவு கிடைத்திருக்கிறது. தன் வாழ்க்கையில் தனக்கு உண்மையானவர்கள் இரண்டே பேர் தான். ஒன்று ஜெயலலிதா மற்றொன்று நடிகை சரோஜா தேவி என நினைத்தாராம். ஒரு கட்டத்தில் சரோஜா தேவி திருமணம் செய்து கொண்டு போகவே அவரிடம் இருந்த ஈடுபாட்டை குறைத்துக் கொண்டாராம் எம்ஜிஆர். ஜெயலலிதாவை தான் தனக்கு அடுத்தபடியாக உயர்த்திக் காட்டனும் என்று மனதிற்குள் நினைத்தாராம். இந்த தகவலை அப்போதைய அமைச்சராக இருந்த ராஜாராமின் தம்பியும் அரசியல் விமர்சகருமான காந்தாராஜ் கூறினார்.