ஒரே படம்!.. மனுஷன் எல்லா விஷயத்துலயும் கில்லி!.. டிராக்கை மாற்றி வெற்றி கண்ட எம்ஜிஆர்!..
பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர், மக்கள் திலகம் என்று மக்களால் அன்பால் அழைக்கப்படும் நடிகர் எம்ஜிஆர். இலங்கையில் பிறந்து மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் வேரூன்றி தமிழக மக்களுக்காகவே தன் வாழ்நாளை கழித்தவர் எம்ஜிஆர்.
சினிமாவில் இருந்து கொண்டு செய்ய முடியாத செயலை அரசியல் மூலமாக மக்களுக்கு தேவையான எல்லா வசதிகளையும் தன் மனமுவந்து சிறப்பாக செய்து முடித்தார் எம்ஜிஆர். நாடக மேடைகளில் முதலில் தோன்றி சினிமாவில் காலடி எடுத்து வைத்த எம்ஜிஆர் பின் தொட்டவை எல்லாம் வெற்றி வெற்றி என முழக்கம் செய்யும் அளவுக்கு வெற்றி வாகை சூடினார்.
ஒரு வசூல் சக்கரவர்த்தியாக வலம் வந்தார். எம்ஜிஆருக்கு என்று சில வரம்புகள் இருந்தன. இவர்கள் எம்ஜிஆரின் இயக்குனர்கள், எம்ஜிஆரின் பாடலாசிரியர்கள் என சிலர் வட்டம் போட்டு எம்ஜிஆரையே சுற்றிக் கொண்டு இருந்தனர். எம்ஜிஆரை வைத்து அதிகமாக படம் எடுத்தவர் தேவர் பிலிம்ஸ். இசையமைத்தவர்கள் எம்.எஸ்.வி, பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா.
இதையும் படிங்க : எப்பா தொகுதில வேலையே இருக்காதா?.. உதயநிதி பற்றிய ரசிகரின் கேள்விக்கு சாட்டையடி பதிலளித்த பிரபலம்…
எம்ஜிஆருடன் அதிகமாக நடித்தவர்கள் ஜெயலலிதாவும் சரோஜா தேவியும். இப்படி எம்ஜிஆர் என்றால் இவர்கள் தான் என வலம் வந்து கொண்டிருந்தனர். மேலும் எம்ஜிஆர் நடித்த படங்கள் பெரும்பாலும் ஆக்ஷன் கலந்த படங்களாவும் நாடக முறையிலும் இருக்கும். அவரை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்கள் ஆகட்டும் இயக்குனர்கள் ஆகட்டும் இதையே பின்பற்றி வந்தனர்.
அப்படி ஒரு நிலைமையை மாற்றி அமைத்த படம் ‘அன்பே வா’ திரைப்படம். எம்ஜிஆரி கெரியரில் முற்றிலும் வித்தியாசமான படம் என்றால் அது அன்பே வா திரைப்படம் தான். இதை அப்பவே எம்ஜிஆர் கூறியிருக்கிறாராம். ‘தனது படங்களிலேயே மிகவும் வித்தியாசமான படம் இதுவென்றும், எப்போது பார்த்தாலும் அந்த வித்தியாசத்தை உணர முடியும் என்றும்’ எம்ஜிஆர் கூறினாராம்.
வெளிப்படப்பிடிப்பு குறைவாக இருந்த அந்த காலகட்டத்தில் சிம்லா சென்று இந்த படத்தை எடுத்தனர். மேலும் ஏவி.எம் நிறுவனம் எம்ஜிஆரை வைத்த தயாரித்த ஒரே திரைப்படம் இது தான். இப்படி ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் கொண்ட அன்பே வா திரைப்படம் எம்ஜிஆரின் ரொமாண்டிக் காட்சிகளை அற்புதமாக காட்டியிருந்தது.
இதையும் படிங்க : சிவாஜியை பல மணி நேரம் காக்க வைத்த பெப்சி விஜயன்!.. மனுஷன் காண்டாகி என்ன பண்ணாரு தெரியுமா?..
காதல் கலந்த நகைச்சுவை கொண்ட இந்த திரைப்படம் ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் 1966ல் வெளியாகி நல்ல வரவேற்பையும் வெற்றியையும் கண்டது. இந்த படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக சரோஜா தேவி நடித்திருப்பார். மேலும் நாகேஷ், டி.ஆர். ராமச்சந்திரன், அசோகன், மனோரமா மற்றும் பலர் நடித்திருப்பர்.