Connect with us
mgr

Cinema History

ஜெய்சங்கர் மீது எம்ஜிஆருக்கு இருந்த பொறாமை!.. படப்பிடிப்பில் துப்பாக்கியுடன் சென்ற சின்னவர்..

கோலிவுட்டில் தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என அனைவராலும் அழைக்கப்பட்டவர் நடிகர் ஜெய்சங்கர். எம்ஜிஆர் ,சிவாஜி இவர்கள் ஒரு மிகப்பெரிய உயரத்தில் இருக்கும்போதே ஒரு தனித்துவம் மிக்க நடிகராக வலம் வந்தவர் ஜெய்சங்கர். தான் யாருக்கும் போட்டி இல்லை, தனியாக வந்து ஜெயிக்க கூடியவன் என்பதை தன் படங்களின் மூலம் நிரூபித்தவர்.

mgr1

jaishankar

வெள்ளி விழா நாயகன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர். அதற்கு காரணம் அந்த நேரத்தில் ஒரு வருடத்திற்கு அதிகமான படங்கள் நடித்த ஒரே நடிகர் ஜெய்சங்கர் தான். தன்னுடன் இருக்கும் கடை நிலை ஊழியர்களை கூட ஒரு தயாரிப்பாளராக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் மிகுந்த ஒரு நல்ல மனிதர்.

அதற்கு ஒரு உதாரணமான சம்பவம் அவருக்கு டிரைவராக வேலை பார்த்த ஒருவரை தயாரிப்பாளராக மாற்றி இருக்கிறாராம். ஆனால் அவரிடம் ஜெய்சங்கர் ஒரு கண்டிஷனும் போடுவாராம். என்னை வைத்து படம் எடுத்து ஒரு நல்ல நிலைமைக்கு வந்ததும் மீண்டும் அதே தவறை செய்யாதே என்று கூறுவாராம் .அதற்கு காரணம் அந்த படத்தின் மூலம் வரும் லாபத்தில் சொத்து வாங்கிக்கொள், பிள்ளைகளுக்கு நல்லபடியாக திருமணம் செய்து வை என்று மட்டும் தான் கூறுவாராம்.

mgr2

jaishankar

நாடக மேடையில் இருந்து வந்த ஜெய்சங்கர், தான் ஒரு பெரிய ஆளாக வளர்ந்தாலும் நாடகத்தின் மீது இருந்த காதலும் அன்பும் அவரை விட்டு என்றைக்குமே குறைந்ததில்லை. வெள்ளி திரையில் ஜொலித்து வந்தாலும் தன் பிறந்த வீடான நாடகத்திலும் அவ்வப்போது நடித்துக் கொண்டுதான் வந்திருக்கிறாராம்.

இந்த நிலையில் ஜெய்சங்கருக்கும் எம்ஜிஆர்ருக்கும் இருந்த அந்த ஒரு உறவை பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு ஒரு பேட்டியின் மூலம் கூறியிருக்கிறார். ஒரு கட்டத்தில் ஜெய்சங்கர் மீது எம்ஜிஆர்க்கு பொறாமை இருந்து வந்ததாகவும் தனக்கு நிகராக தன்னைப் போலவே வளர்ந்து வரும் ஒரு நடிகராகவே ஜெய்சங்கரை பார்த்து பொறாமை கொண்டதாக எம்ஜிஆரை பற்றி செய்யாறு பாலு கூறினார்.

mgr3

jaishankar jayalalitha

அதுமட்டுமில்லாமல் ஜெய்சங்கர் உடன் ஜோடியாக ஜெயலலிதா நடித்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்ததாலும் ஜெய்சங்கருக்கு ஏற்ற ஜோடியாக ஜெயலலிதாவை மக்கள் பார்க்க ஆரம்பித்தனர் என்பதை தெரிந்த எம்ஜிஆர் அவர்கள் இருவரையும் ஜோடி சேராமல் தடுத்து நிறுத்தினார் என்று செய்யாறு பாலு கூறினார்.

இதையும் படிங்க : என் சீனை எல்லாம் கட் பண்ணிட்டியா… பாக்கியராஜால் கோபமான சிவாஜி கணேசன்…

ஆனால் அதை மீறி ஜெயலலிதா ஒரு படத்தில் ஜெய்சங்கருக்கு ஜோடியாக நடித்த ஒப்புக்கொண்டாராம் .அதாவது ஜெயலலிதாவை தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க எம்ஜிஆர் எண்ணுவாராம் .ஆனால் ஜெயலலிதா இவர் என்ன சொல்லுவது என்ற நிலையில் அவரையும் மீறி அந்த ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் .அதை அறிந்த எம்.ஜி.ஆர் நேராக அந்த படப்பிடிப்பிற்கு துப்பாக்கியுடன் சென்றுவிட்டாராம். அதன் பிறகு எம்ஜிஆரை சமாதானப்படுத்தி எந்த ஒரு விபரீதமும் நடக்காமல் பார்த்துக் கொண்டாராம் ஜெயலலிதா. ஆனால் அதன் பிறகு தான் எம்ஜிஆருக்கு புரிந்ததாம் .”ஒருவரின் வளர்ச்சியை தடுக்க முடியுமே தவிர மொத்தமாக அழிக்க முடியாது என்பதை புரிந்து கொண்டாராம் எம்ஜிஆர்” இதை செய்யாறு பாலு அந்த பேட்டியில் கூறினார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top