சிவாஜி பின்னால் சென்ற இயக்குனர்கள்!.. தன்னை நிரூபிக்க எம்.ஜி.ஆர் என்ன செய்தார் தெரியுமா?...
திரையுலக பொறுத்தவரை தொடர்ந்து தோல்வி படங்களை ஒரு நடிகர் கொடுத்தால் அவரை தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் ஒதுக்கிவிடுவார்கள். ஒரு கட்டத்தில் அந்த நடிகருக்கு வாய்ப்புகளே இல்லாமல் போய்விடும். இது எம்.ஜி.ஆருக்கே நடந்துள்ளது என்பது ஆச்சர்ய செய்தி.
1950களில் எம்.ஜி.ஆரின் சில படங்கள் சரியாக ஓடவில்லை. எனவே, இயக்குனர்கள் சிவாஜியை வைத்து படம் எடுப்பதில் ஆர்வம் காட்டிய காலம் அது. யாரையும் நம்பாத எம்.ஜி.ஆர் ‘என்னை நிரூபிக்க நானே படம் எடுக்கிறேன்’ என களம் இறங்கினார். அப்படி உருவான திரைப்படம்தான் நாடோடி மன்னன். அப்படத்தை தயாரித்ததோடு அவரே இயக்கினார்.
நாடோடி மன்னனை எம்.ஜி.ஆர் துவங்கிய போது ‘எம்.ஜி.ஆருக்கு எதற்கு இந்த வேலை.. கெட்டகாலம் வந்தால் எல்லாம் சேர்ந்து வரும்’ என பலரும் பேசினார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் துணிச்சலாக இறங்கினார். எம்.ஜி.ஆருடன் நம்பியார், பானுமதி, சரோஜா தேவி, பி.எஸ்.வீரப்பா, சந்திரபாபு, எம்.என்.ராஜம் என பலரும் நடித்த நாடோடி மன்னன் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.
இப்படத்தின் வெற்றி மூலம் திரையுலகத்திற்கு தான் யார் என நிரூபித்தார் எம்.ஜி.ஆர். அதோடு, தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதையும் திரையுலகுக்கு நிரூபித்தார். இந்த படம் வெளிவந்த பின், எம்.ஜி.ஆர் படப்பிடிப்பு வந்தாலே இயக்குனர்கள் அவரை பார்த்து நடுங்க துவங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “நான் சூப்பர் ஸ்டார்… ஆனால் என்னால இதெல்லாம் பண்ணவே முடியாது”… கேட்கவே வருத்தமா இருக்கு…