More
Categories: Cinema History Cinema News latest news

வாய்ப்புக்கு உதவியவரின் உடலை சுமந்த எம்.ஜி.ஆர்!.. அட அந்த நடிகரா?!….

திரையுலகில் சிலர் உதவிகள் பெற்றாலும் நன்றியுணர்ச்சியுடன் இருக்காமாட்டார்கள். ஆனால், சிலரோ மற்றவர்கள் தங்களுக்கு செய்த உதவிகளை மறக்காமல் காலம் முழுவதும் நன்றியோடு இருப்பார்கள். அதேபோல், மற்றவர்கள் நமக்கு உதவியது போல நாமும் பிறக்கு உதவ வேண்டும் என நினைப்பார்கள். மறைந்த நடிகர் எம்.ஜி.ஆர் அதில் முக்கியமானவர்.

மறைந்த முதல்வரும் நடிகையுமான ஜெயலலிதா ஒருமுறை எம்.ஜி.ஆரை பேட்டியெடுத்தார். அப்போது ‘நீங்கள் எல்லோருக்கும் உதவி செய்கிறீர்கள். நீங்கள் கஷ்டப்படும் போது உங்களுக்கு யாராவது உதவி செய்துள்ளார்களா?’ என ஒரு கேள்வி கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர் ‘உதவிகளாலேயே வளர்ந்தவன் நான்’ என பதில் சொன்னார்.

Advertising
Advertising

குடும்ப வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை விட்டுவிட்டு எம்.ஜி.ஆரும், அவரின் அண்ணன் சக்கரபாணியும் சிறு வயதிலேயே நாடகத்தில் நடிக்க முடிவு செய்தனர். ஏனெனில், அதில் வரும் பணத்தில் வீட்டின் வறுமையாக போக்கலாம் என இருவரும் முடிவு செய்தனர்.

முதலில் மதுரவாயல் நாடக கம்பெனியில் இருவரும் சேர முயன்றனர். ஆனால், அந்த நாடக கம்பெனியின் நிறுவனர் கந்தசாமி முதலியார் அவர்களை சேர்க்க மறுத்துவிட்டார். அப்போது, கே.வி.காமாட்சி என்பவர் ரெக்கமெண்ட் செய்து இருவரையும் சேர்த்துவிட்டார். கே.வி.காமாட்சி ஒரு வசனகர்த்தா, நாடக நடிகர், என்.எஸ்.கிருஷ்ணனின் நாடக குழுவிலும் இருந்துள்ளார். தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களுக்கு கதையெழுதிய கலைஞானத்தின் சகோதரர் ஆவார். பராசக்தி படத்தில் பூசாரியாக நடித்திருப்பார்.

ஒருகட்டத்தில் இவரும் வறுமையில் சிக்கி மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இவரது உடலை எம்.ஜி.ஆரும், என்.எஸ்.கிருஷ்ணனும் முன் பக்கத்தை தூக்க, பின்னால் வி.கே.ராமசாமி உள்ளிட்ட சிலர் தூக்கி சென்னை கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில் அடக்கம் செய்துள்ளனர்.

மேலும், ஆரம்பகாலத்தில் தனக்கு உதவிய கே.வி.காமாட்சி பட்ட கடனையும் எம்.ஜி.ஆர் அடைத்துள்ளார். இந்த தகவலை கலைஞானமே தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Published by
சிவா

Recent Posts