தமிழ் சினிமாவின் அடையாளமாக காணப்படுபவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். எக்காலத்துக்கும் மக்கள் போற்றும் சிறந்த நடிகராக மட்டுமின்றி மக்களின் தேவைகளை புரிந்து அவற்றை சீரமைத்து அரசியல் தலைவராகவும் விளங்கியவர். பல நடிகர்கள் அரசியல் தலைவர்களும் அவரின் இடத்தை பிடிக்க முயன்றாலும் இன்று வரை அதை யாராலும் நெருங்க கூட முடியவில்லை என்பதே உண்மை.
சந்திரபாபு தமிழ் திரையுலகில் பழம்பெறும் சிறந்த நகைச்சுவை நடிகரும் பின்னணி பாடகரும் ஆவார். அமராவதி என்னும் திரைப்படத்தில் அறிமுகமான இவர் விரைவிலேயே சிறந்த முன்னணி நகைச்சுவை நடிகராக உருவெடுத்தார். நகைச்சுவை மட்டும் இன்றி சிறந்த குணசித்திர நடிகராகவும் விளங்கினார். அக்காலகட்டத்தில் மெட்ராஸ் பாஷையை சிறப்பாக கையாண்டு நகைச்சுவையை வெளிப்படுத்துவதில் பெயர் பெற்றிருந்தார். அன்று முன்னணி நடிகராக விளங்கிய எம்.ஜி.ஆர்,சிவாஜி கணேசன்,ஜெமினி கணேசன் என அனைவரது திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
அப்படி எம்.ஜி.ஆருடன் நடிக்கும் போது படப்பிடிப்பு தளத்தை கலப்பாக மாற்றுவதற்காக ஒரு காரியம் ஒன்றை செய்துள்ளார். எம்.ஜி.ஆர் புதுமைப்பித்தன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். இப்படத்தை டி.ஆர்.ராமண்ணா இயக்கினார். இப்படத்திற்க்கு கதை எழுதியவர் கலைஞர் கருணாநிதி. ஜி.ராமநாதன் இப்படத்திற்கு இசை அமைத்திருப்பார். மேலும் இப்படத்தில் எம்.ஜி.ஆர் உடன் டி.ஆர் ராஜகுமாரி ,பி.எஸ் சரோஜா,எஸ் பாலையா மற்றும் சந்திரபாபு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பர்.
எம்.ஜி.ஆர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது வாகினி ஸ்டூடியோவில் பெண் வேடத்திற்காக மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது சந்திரபாபு வந்து கதவை தட்டினார் எம்.ஜி.ஆருக்கு கதவை தட்டுவது யார் என்று நன்றாக தெரியும். கதவைத் திறந்ததும் பெண் வேடத்தை சந்திரபாபு பார்த்து விட்டால் பயங்கரமாக கிண்டல் செய்வார் என்பதால் கதவை திறக்காமல் இருந்தார் எம்.ஜி.ஆர். உடனே சந்திரபாபு பக்கத்தில் இருந்த அறைக்கு சென்று டேபிளை எடுத்துப் போட்டு அதன் மீது ஏறி நின்று எட்டி பார்த்து சிரித்தார்.
ஆண்கள் உள்ளே வரக்கூடாது என்று பெண் குரலில் கூறினார் எம்.ஜி.ஆர். சந்திரபாபு ”ஓ மை டார்லிங், ஓ மை லவ்” என்று காதலியை அழிப்பது போல் கூறி குறும்புத்தனம் செய்தார். இதனால் எம்.ஜி.ஆர் வெளியே வராமல் சிறிது நேரம் அறைக்குள் இருந்தார். விஷயம் கேள்விப்பட்டு ஒடி வந்த தயாரிப்பாளர் முனிரத்தினம் கொஞ்சம் பொறுங்கள் ஷாட் எடுத்து முடிந்ததும் நீங்கள் விளையாடிக் கொள்ளுங்கள் என்று சந்திரபாபுவை கெஞ்ச தொடங்கினார்.
எம்.ஜி.ஆர் அவரின் அறையின் கதவை திறந்து வெளியே வந்த போது சந்திரபாபு பக்கத்து அறையில் இருந்து ஓடி வந்து ஓ மை டார்லிங் ஐ லவ் யூ என்று கண்டுபிடிக்க பாய்ந்தார். அவரை தடுத்து நிறுத்தி கஷ்டப்பட்டு எம்.ஜி.ஆரை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்துச் சென்றனர். சந்திரபாபு இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும்.
Sun serials:…
தமிழக வெற்றிக்கழகம்…
தமிழ் சினிமாவில்…
GoatMovie: விஜய்…
சத்யராஜ் ஆரம்பகாலகட்டத்தில்…