தற்கொலைக்கு முயற்சி செய்த எம்.ஜி.ஆர்...! காரணமான மனைவியின் நிலைமை என்னாச்சுனு தெரியுமா..?

தமிழ் சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் நடிகர் எம்.ஜி.ஆர். இவரது சினிமா வாழ்க்கையிலும் சரி அரசியல் வாழ்க்கையிலும் சரி ஒப்பற்ற மனிதராகவே திகழ்ந்திருக்கிறார். ஆனால் தனது சொந்த வாழ்க்கையில் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார் எம்.ஜி.ஆர். மொத்தம் அவருக்கு மூன்று மனைவிகள். சினிமாவிற்கு வருவதற்கு முன்னரே பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த நிகழ்வை மிகவும் சுவாரஸ்யமாக தனது கட்டுரையில் எழுதியுள்ளார் எம்.ஜி.ஆர்.
அதாவது பெண்பார்க்கும் படலமான சம்பிரதாயம் எம்.ஜி.ஆர்ரின் வாழ்விலும் நடந்துள்ளது. பார்கவியை பெண் பார்க்க போன போது பார்கவி அவ்வளவு அழகான சிவந்த நிறமுடைய பெண்ணாக இருந்திருக்கிறார். இருவர் வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்தேறியிருக்கிறது. இருவரும் ஓருயிர் ஈருடலாக தங்கள் காதலை வெளிப்படுத்தி வந்திருக்கின்றனர் திருமணத்திற்கு பிறகும். அந்த நேரம் உலகப்போர் சமயம்.
சென்னையில் குண்டு மழை பொழியும் என அஞ்சி எம்.ஜி.ஆர் தனது மனைவி, தாய், அண்ணி ஆகியோரை பாலக்காடு அனுப்பி வைத்திருக்கிறார். ஆனால் மனைவி பார்கவியோ எம்.ஜி.ஆரை பிரிய மனமில்லாமல் அழுது கொண்டே போக எம்.ஜி.ஆர் சமாதானம் செய்து அனுப்பி வைத்திருக்கிறார். பொருளாதார நெருக்கடியில் இருந்த எம்.ஜி.ஆர் அப்பொழுது ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். சரி மனைவியை பார்த்து விட்டு வரலாம் என எண்ணி சென்றிருக்கிறார். அப்பொழுது தான் அந்த அதிர்ச்சியான சம்பவம் நடந்திருக்கிறது. தகவல் பரிமாற்றத்திற்கு மிகவும் கஷ்டமான காலம் அது.
ஆதலாம் எம்.ஜி.ஆருக்கு உடனே தெரியப்படுத்துவதென்பது சாத்தியம் இல்லை. இவரது மனைவி உடல் நிலை சரியில்லாமல் இறந்து போக இவர் வருவதற்கு முன்பே புதைத்து விட்டார்கள். இதை அறிந்த எம்.ஜி.ஆர் எப்படி நான் வருவதற்குள் புதைத்தீர்கள் என அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியிருக்கிறார். இருந்தாலும் அந்த நிகழ்வை அடுத்து எம்.ஜி.ஆர் எப்பொழுது போல் இருப்பது மாதிரியான பிம்பத்தை மற்றவர்களிடம் ஏற்படுத்தி ஒரு இரவு ரயில் நிலையத்தில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலைக்கு முயற்சிப்பதற்காக சென்றிருக்கிறார். அவரை பின் தொடர்ந்த அவரது அண்ணன் அதை பார்த்து இந்த மாதிரியான நேரத்தில் கூட ஒரு ஆள் தேவை என சொல்லி அவரது வளர்ச்சி பாதைக்கு அவரது அண்ணனின் பங்கும் முக்கியமானதாக இருந்திருக்கிறது.