எம்.ஜி.ஆரை கண்டபடி திட்டிய நடிகர்!.. பொன்மன செம்மல் செய்ததுதான் ஹைலைட்!..
எம்.ஜி.ஆருக்கு ஒரு பழக்கம் உண்டு. தன்னை ஒருவர் எப்படி தவறாக விமர்சித்தாலும் அதற்கு பெரிதாக ரியாக்ட் செய்ய மாட்டார். ஏனெனில், தனது வாழ்வில் பல அவமானங்களை தாண்டியே சினிமாவில் முக்கிய இடத்திற்கு வந்தவர் இவர். அவர் பார்க்காத வறுமையோ, பிரச்சனையோ கிடையாது.
பல நடிகர்களே பொறாமையில் அவரை மோசமாக விமர்சித்திருக்கிறார்கள். ஆனால், அவற்றையெல்லாம் மறந்து மன்னித்துவிட்டு கடந்து போனவர்தான் எம்.ஜி.ஆர். அதோடு, தன்னை திட்டிய பலருக்கும் பல வகைகளில் அவர் உதவியும் செய்திருக்கிறார். இதற்கு திரையுலகில் பல சம்பவங்கள் உண்டு.
இதையும் படிங்க: என்னது இது சிவாஜி இயக்கிய படமா? ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த அந்த படம் எதுனு தெரியுமா?
திரையுலகில் எம்.ஜி.ஆரின் போட்டி நடிகராக பார்க்கப்பட்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான். அதோடு, அரசியல்ரீதியாகவும் இருவரும் வெவ்வேறு கொள்கைகளை கொண்டிருந்தார்கள். எம்.ஜி.ஆர் திராவிட கட்சிகளை ஆதரித்தவர். சிவாஜியோ காங்கிரஸை ஆதரித்தவர். எனவே, அரசியல் மேடைகளில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக்கொள்வார்கள். இது பலமுறை நடந்துள்ளது.
70களில் சசிக்குமார் என்கிற ஒரு நடிகர் இருந்தார். பாரத விலாஸ், ராஜபார்ட் ரங்கதுரை, காசேதான் கடவுளே, அரங்கேற்றம் என பல படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் தீவிர சிவாஜி ரசிகர். சிவாஜி ரசிகர் மன்ற பொறுப்புகளிலும் இருந்திருக்கிறார். இவர் சிவாஜிக்கு ஆதரவாக மேடைகளில் பேசும்போது எம்.ஜி.ஆரை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்வார்.
இதையும் படிங்க: முகத்தை திருப்பிக்கொண்ட பிரபல நடிகர்..! அவருக்கு நடிக்க சொல்லி கொடுத்து லைக் வாங்க வைத்த சிவாஜி..!
ஒருமுறை வீட்டில் நடந்த தீ விபத்தில் சிக்கி சசிக்குமார் படுகாயமடைந்தார். சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் அப்போது, அவரை பார்க்க எம்.ஜி.ஆர் சென்றார். உடலின் 90 சதவீதம் வெந்துபோன நிலையில் அவருக்கு நினைவு மட்டும் இருந்தது.
வந்தது எம்.ஜி.ஆர் என்று தெரிந்ததும் ‘உங்களை எப்படி விமர்சனம் செய்திருக்கிறேன். ஆனால், என்னை பார்க்க நீங்கள் வந்திருக்கிறீர்கள்’ என சொல்லிய அவரின் கண்களில் நீர் வழிந்தது. ‘இப்போ அதுக்கு இதெல்லாம். உனக்கு சரியாகிவிடும்’ என ஆறுதல் சொல்லிவிட்டு அங்கிருந்த மருத்துவர்களிடம் ‘சசிக்குமாருக்கு சிறந்த சிகிச்சையை கொடுங்கள்’ என சொல்லிவிட்டுப்போனார் எம்.ஜி.ஆர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி சசிக்குமார் மரணமடைந்தார்.
இதையும் படிங்க: விஜயகாந்தை மறந்துபோன சிவாஜி!.. ஆனாலும் நடிகர் திலகத்துக்கு ஆதரவா நின்ன கேப்டன்!..