ஒரே நாளில் மோதிய எம்ஜிஆர் - சிவாஜி படங்கள்... வசூல் சக்கரவர்த்தி யாருன்னு பார்ப்போமா?..

by sankaran v |   ( Updated:2024-04-16 04:23:06  )
Sivaji, MGR
X

Sivaji, MGR

புரட்சித்தலைவர், மக்கள் திலகம், பொன்மனச்செம்மல் என்றெல்லாம் போற்றப்பட்டவர் எம்ஜிஆர். நடிகர் திலகம், கலைத்தாயின் தவப்புதல்வன் என்றெல்லாம் அழைக்கப்பட்டவர் சிவாஜி கணேசன். இருவரது படங்களும் மோதினால் எப்படி இருக்கும். ஒருவர் ஸ்டைல் கிங் என்றால், இன்னொருவர் நடிப்பில் புலி. வாங்க வசூல்ல மன்னன் யாருன்னு... பார்க்கலாம்.

1954ல் எம்ஜிஆரின் கூண்டுக்கிளியும், சிவாஜியின் தூக்கு தூக்கியும் ஒரே நாளில் ரிலீஸ். இதுல சிவாஜி தான் வின்னர். 1956ல் சிவாஜிக்கு நான் பெற்ற செல்வம், நல்ல வீடு படங்களும், எம்ஜிஆருக்கு அலிபாபாவும் 40 திருடர்களும் படம் ரிலீஸ். இதுல எம்ஜிஆர் தான் வின்னர்.

Pantha pasam

Pantha pasam

அதே ஆண்டில் எம்ஜிஆருக்கு தாய்க்குப் பின் தாரம், சிவாஜிக்கு வாழ்விலே ஒரு நாள் படம் ரிலீஸ். இதுல எம்ஜிஆர் தான் வின்னர். 1960ல் எம்ஜிஆருக்கு மன்னாதி மன்னன், சிவாஜிக்கு பாவை விளக்கு பெற்ற மனம் படங்கள் ரிலீஸ். இதுல எம்ஜிஆர் தான் வின்னர். 1961ல் எம்ஜிஆருக்கு தாய் சொல்லைத் தட்டாதே, சிவாஜிக்கு கப்பலோட்டிய தமிழன் ரிலீஸ். இதுல எம்ஜிஆர் தான் வின்னர்.

1962ல் எம்ஜிஆருக்கு ராணி சம்யுக்தா, சிவாஜிக்கு பார்த்தால் பசி தீரும் படங்கள் ரிலீஸ். இதுல சிவாஜி தான் வின்னர். 1962ல் எம்ஜிஆருக்கு தாயைக் காத்த தனயன், சிவாஜிக்கு படித்தால் மட்டும் போதுமா படங்கள் ரிலீஸ். இதுல எம்ஜிஆர் தான் வின்னர்.

1962ல் எம்ஜிஆருக்கு விக்கிரமாதித்தன், சிவாஜிக்கு பந்தபாசம் ரிலீஸ். இதுல சிவாஜி தான் வின்னர். 1963ல் சிவாஜிக்கு சித்தூர் ராணிபத்மினி, எம்ஜிஆருக்கு கொடுத்து வைத்தவள் படங்கள் ரிலீஸ். இதுல எம்ஜிஆர் தான் வின்னர். 1963ல் எம்ஜிஆருக்கு பரிசு, சிவாஜியின் அன்னை இல்லம் ரிலீஸ். இதுல எம்ஜிஆர் தான் வின்னர். 1964ல் எம்ஜிஆருக்கு வேட்டைக்காரன், சிவாஜிக்கு கர்ணன் ரிலீஸ். இதுல எம்ஜிஆர் தான் வின்னர்.

1964ல் சிவாஜிக்கு கைகொடுத்த தெய்வம், எம்ஜிஆருக்கு தெய்வத்தாய் ரிலீஸ். இதுல எம்ஜிஆர் தான் வின்னர். 1964ல் சிவாஜிக்கு நவராத்திரி, முரடன் முத்து, எம்ஜிஆருக்கு படகோட்டி ரிலீஸ். இதுல எம்ஜிஆர் தான் வின்னர்.

1965ல் சிவாஜிக்கு பழநி, எம்ஜிஆருக்கு எங்க வீட்டு பிள்ளை படங்கள் ரிலீஸ். இதுல எம்ஜிஆர் படம் 200 நாள்கள் ஓடி சாதனை படைத்தது. எம்ஜிஆர் தான் வின்னர். 1965ல் எம்ஜிஆருக்கு ஆசை முகம், சிவாஜிக்கு நீலவானம் படங்கள் ரிலீஸ். இதுல எம்ஜிஆர் தான் வின்னர். 1966ல் எம்ஜிஆருக்கு தாலி பாக்கியம், சிவாஜிக்கு தாயே உனக்காக ரிலீஸ். இதுல எம்ஜிஆர் தான் வின்னர்.

1966ல் எம்ஜிஆருக்கு பறக்கும் பாவை, சிவாஜிக்கு செல்வம் ரிலீஸ். இதுல எம்ஜிஆர் தான் வின்னர். 1967ல் எம்ஜிஆருக்கு தாய்க்கு தலைமகன், சிவாஜிக்கு கந்தன் கருணை ரிலீஸ். இதுல சிவாஜி தான் வின்னர். அதே ஆண்டில் எம்ஜிஆருக்கு அரசகட்டளை, சிவாஜிக்கு தங்கை ரிலீஸ். இதுல எம்ஜிஆர் தான் வின்னர்.

Arasakattalai

Arasakattalai

அதே ஆண்டில் எம்ஜிஆருக்கு விவசாயி, சிவாஜிக்கு இருமலர்கள், ஊட்டி வரை உறவு ரிலீஸ். இதுல ஊட்டி வரை உறவு, விவசாயி இரண்டுமே வெற்றி. 1968ல் எம்ஜிஆருக்கு காதல் வாகனம், சிவாஜிக்கு எங்க ஊர் ராஜா ரிலீஸ். இதுல எம்ஜிஆர் தான் வின்னர்.

1969ல் எம்ஜிஆருக்கு அடிமைப் பெண், சிவாஜிக்கு அவர் கௌரவ வெடத்தில் நடித்த காவல் தெய்வம் ரிலீஸ். இதுல எம்ஜிஆர் தான் வின்னர். அதே ஆண்டில் எம்ஜிஆருக்கு நம் நாடு, சிவாஜிக்கு சிவந்த மண் ரிலீஸ். இதுல எம்ஜிஆர் தான் வின்னர்.

1970ல் சிவாஜிக்கு எங்க மாமா, எம்ஜிஆருக்கு மாட்டுக்கார வேலன் ரிலீஸ். இதுல எம்ஜிஆர் தான் வின்னர். 1971ல் எம்ஜிஆருக்கு நீரும் நெருப்பும், சிவாஜிக்கு பாபு ரிலீஸ். இதுல எம்ஜிஆர் தான் வின்னர்.

1972ல் எம்ஜிஆருக்கு நல்ல நேரம், சிவாஜிக்கு ஞான ஒளி ரிலீஸ். இதுல எம்ஜிஆர் தான் வின்னர்.

Next Story