ரொமான்ஸ் சீன் எடுக்கும்போது சாரி கேட்டா எப்படி?!.. சரோஜாதேவியிடம் Fun பண்ணிய எம்.ஜி.ஆர்...
Mgr sarojadevi: கன்னடத்து பைங்கிளியான சரோஜா தேவியை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தவர் எம்.ஜி.ஆர்தான். அவர் தயாரித்து, இயக்கி, நடித்த நாடோடி மன்னன் படத்திலிருந்து பானுமதி விலகிவிட அவருக்கு பதில் சரோஜா தேவியை நடிக்க வைத்தார். இந்த படம்தான் சரோஜா தேவியை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது.
அதன்பின் எங்க வீட்டு பிள்ளை, படகோட்டி, அன்பே வா, பாசம், பணத்தோட்டம், தாயைக்காத்த தலைவன், தெய்வத்தாய், ஆசை முகம், குடும்ப தலைவன், பணக்கார குடும்பம் உள்ளிட்ட பல படங்களிலும் இருவரும் ஜோடி போட்டு நடித்து ரசிகர்களை மகிழ்வித்தனர். இன்னும் சொல்லப்போனால் எம்ஜிஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி மட்டுமே.
இதையும் படிங்க: சாவித்ரியிடம் போட்டி போட்ட சரோஜா தேவி… கன்னட பைங்கிளிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மக்கள் திலகம்…
சரோஜா தேவியின் கட்டழகும், கொஞ்சி கொஞ்சி பேசும் அவரின் தமிழும் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எம்.ஜி.ஆர் மட்டுமில்லாமல் சிவாஜி உள்ளிட்ட பலருடனும் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். அதேபோல், பல கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும், விஜயுடன் ஒன்ஸ்மோர், சூர்யாவுடன் ஆதவன் ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய சரோஜாதேவி எம்.ஜி.ஆருடன் நடித்தபோது ஏற்பட்ட பல முக்கிய மற்றும் சுவாரஸ்யமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். எம்.ஜி.ஆருடன் திருடாதே படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது வேறு ஒரு படத்திலும் நடித்து வந்தேன். அந்த படத்தின் படப்பிடிப்பு இரவு முழுவதும் நடந்து அதிகாலை 5 மணிக்கு முடிந்தது.
இதையும் படிங்க: சரோஜாதேவியை கழட்டிவிட முடிவு செய்த எம்.ஜி.ஆர்!.. பின்னணியில் இருந்த காரணம் அதுதான்!…
உடனே வீட்டிற்கு போய் குளித்துவிட்டு ரெடியாகி ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு ஓடினேன். ஏனெனில் திருடாதே படப்பிடிப்பில் நான் கலந்துகொள்ள வேண்டும். எம்.ஜி.ஆரை காக்க வைக்க கூடாது என யோசித்துக்கொண்டே போனால், அவர் அங்கு ரெடியாக எனக்காக காத்திருந்தார்.
அவரிடம் சென்று சாரி சாரி. மன்னிச்சிடுங்க என பலமுறை மன்னிப்பு கேட்டேன். அதற்கு அவர் ‘பரவாயில்லமா. நைட் முழுக்க ஷூட்டிங் பண்ணி இருக்க. இப்ப நாம எடுக்கப்போறது ரொமான்ஸ் சீன். எனவே, அதையெல்லாம் மறந்துடு. அப்பதான் காட்சி நன்றாக வரும்’ என சொன்னார். அப்போதுதான் ‘என்னருகே நீ இருந்தால்’ என்கிற பாடல் காட்சியை எடுத்தோம்’ என சரோஜாதேவி கூறியிருந்தார்.
இதையும் படிங்க: சரோஜாதேவிக்கு எமனாக வந்த எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா ஜோடி!.. எல்லா வாய்ப்பும் போச்சி!…