நிறைவேறாத எம்ஜிஆரின் ஆசை!.. ஏக்கத்தில் புரட்சித்தலைவர் செய்த காரியம்!..
புரட்சித்தலைவர் , பொன்மனச்செம்மல் , மக்கள் திலகம் என அனைவராலும் அன்பால் அழைக்கப்படுபவர் நடிகர் எம்ஜிஆர். அவ்வளவு சீக்கிரம் எந்த ஒரு நடிகரும் மக்கள் மனதை வெகு சீக்கிரமாக பிடித்து விட முடியாது. அதே போல் தான் எம்ஜிஆரும் நடிக்க வந்த புதிதில் மக்கள் யாரும் அவரை கண்டு கொள்ளவில்லை.
எம்ஜிஆர் ஆற்றிய நற்பண்புகள்
போக போக அவரின் நல்லெண்ணங்கள், பழக்கவழக்கங்கள், மக்களுக்காக படத்தின் மூலம் சொல்லப்படும் கருத்துக்களால் மிகவும் ஈர்க்கப்பட்டார் எம்ஜிஆர். ஒரு காலத்தில் தங்கள் தலைவராகவே மக்கள் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தனர். தான் நடிக்கும் படங்கள் பாடல்கள் மூலம் ரசிகர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினார்.
இவரின் நடிப்பால் கூட யாரும் கஷ்டப்பட கூடாது என்பதற்காக குடிப்பழக்கம், மாது போன்ற காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து வந்தார் எம்ஜிஆர். சிறந்த முற்போக்கு சிந்தனையாளராகவும் விளங்கினார். சாமியே கதி என்று கிடப்பது போன்ற ஆன்மீக காட்சிகளில் கூட நடித்ததில்லை. இவரை வைத்து தேவர் ஃபிலிம்ஸ் 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டிருக்கிறது.
இயக்குனர் மீதுள்ள ஈர்ப்பு
ஏகப்பட்ட இயக்குனர்கள் எம்ஜிஆரை வைத்து இயக்கியிருக்கின்றனர். ஆனால் எம்ஜிஆருக்கு ஒரு தடவையாவது எஸ்.எஸ்.வாசன் இயக்கத்தில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்ற ஆசையில் இருந்தாராம்.ஆசை என்று கூட சொல்லமுடியாது. அது ஒரு ஏக்கம். எஸ்.எஸ்.வாசன் இயக்கத்தில் சந்திரலேகா என்ற ஒரு பிரம்மாண்டமான படத்தை பார்த்து தான் எம்ஜிஆருக்கு இப்படி ஒரு ஆசையாம்.
இதையும் படிங்க : 60 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த சரத்குமார்… “பரவாயில்ல வெயிட் பண்றேன்”… கே.எஸ்.ரவிக்குமாரிடமிருந்து வெளிப்பட்ட பெருந்தன்மை…
ஆனால் எம்ஜிஆரின் ஒரு படத்திற்கு எஸ்.எஸ்.வாசன் இயக்குவதாக இருந்ததாம். ஆனால் அதை வாசன் தான் மறுத்திருக்கிறார். ஏன் என எம்ஜிஆர் கேட்க அதற்கு வாசன் ‘உங்களை வைத்து இயக்க நான் நின்னும் என்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்’ என்று கூறினார். அதன் பின் வரிசையாக பல இயக்குனர்களை வைத்து நிறைய ஹிட் படங்களை கொடுத்து வந்திருக்கிறார் எம்ஜிஆர்.
ஆசையை தீர்த்துக் கொண்ட எம்ஜிஆர்
1974 ஆம் ஆண்டு ‘சிரித்த் வாழ வேண்டும்’ என்ற படம் வெளியானது. அந்தப் படத்தை வாசனின் மகனான எஸ்.எஸ்.பாலசுப்பிரமணியன் தான் இயக்கினாராம். இதற்கும் எம்ஜிஆர் தான் காரணம். எப்படியாவது வாசனின் இயக்கத்தில் ஒரு படமாவது நடித்து விட வேண்டும் என எண்ணியிருந்த எம்ஜிஆரின் எண்ணம் நிறைவேறாமல் போனாலும்
இதையும் படிங்க : “தம் அடிச்சா வெளுத்துப்புடுவேன்”… பிரபல நடிகரை மிரட்டிய விஜயகாந்த்… யார்ன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!!
வாசன் இல்லையென்றால் என்ன அவரது மகனை வைத்து நினைத்ததை நிறைவேற்றிவிடலாம் என்று அவரது மகனை இயக்க சொன்னாராம் எம்ஜிஆர். இதை சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.