Cinema History
இந்த படத்தில் நான் நடிக்கட்டுமா?.. எம்.ஜி.ஆர். கேட்டு வாங்கி நடித்த அந்த திரைப்படம்!…
திரையுலகில் எம்.ஜி.ஆர் எப்படிப்பட்ட ஆளுமைமிக்க நடிகராக இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும் அவர் ஒன்றை சொன்னால் அதுவே இறுதி. அதேநேரம், மற்றவர்கள் சொல்லும் கருத்தில் நியாயம் இருந்தால் அதை எம்.ஜி.ஆர் ஏற்றும் கொள்வார். ரஜினி, விஜய் என அதிக வசூலை பெறும் நடிகர்கள் இப்போது இருந்தாலும் இவர்களுக்கெல்லாம் முன்னோடி எம்.ஜி.ஆர்.தான்.
1960களில் சூப்பர்ஸ்டாராகவும், வசூல் சக்கரவர்த்தியாகவும் இருந்தவர் எம்.ஜி.ஆர். சிறு வயது முதலே நாடகங்களில் நடித்து வந்தவர். 30 வருடங்கள் சினிமாவில் நடித்துவிட்டு அதன்பின் பின் கஷ்டப்பட்டு சினிமாவில் வாய்ப்பு வாங்கி நடித்திருக்கிறார். அதுவும் 10 வருடங்கள் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர்.
இதையும் படிங்க: அப்பவே சிவாஜி படத்துல ரெண்டு கிளைமேக்ஸ்!.. அது மட்டும் வந்திருந்தா செம ஹிட்டு!..
ராஜகுமாரி திரைப்படம் மூலம் ஹீரோவாக மாறியவர். ஹீரோவாக நடிக்க எம்.ஜி.ஆர் படாத கஷ்டம் இல்லை. பல அவமானங்களையும் சந்தித்திருக்கிறார். ராஜகுமாரி படம் ஹிட் அடிக்கவே அவருக்கு தொடர் வாய்ப்புகள் வந்தது. துவக்கத்தில் எம்.ஜி.ஆர் நடித்தது எல்லாமே சரித்திர படங்கள்தான்.
எனவே, வாள் வீச்சி சண்டைகள் அதிகம் இடம் பெற்றிருக்கும். எம்.ஜி.ஆருக்கும் அது நன்றாகவே தெரியும் என்பதால் மிகவும் அற்புதமாக அந்த காட்சிகளில் நடித்து தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார். திரையுலகில் எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் சாண்டோ சின்னப்ப தேவர்.
சிறு வயதிலேயே எம்.ஜி.ஆரின் நண்பராக இருந்தவர் இவர். எம்.ஜி.ஆரை வைத்து 15க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவர் இவர். ஆனால், சில காரணங்களால் எம்.ஜி.ஆருக்கும் அவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு 3 வருடங்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
அப்போது தாய் சொல்லைத் தட்டாதே என்கிற படத்தை துவங்கினார் தேவர். அந்த படத்தில் ஜெமினி கணேசனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது. 2 பாடல்களையும் மெஜஸ்டிக் ஸ்டுடியோவில் ரிக்கார்டிங் செய்தார் தேவர். அப்போது அங்கு வந்த எம்.ஜி.ஆர் அவரை பார்த்ததும் ‘என்ன படத்துக்கான ரிக்கார்டிங் அண்ணே?’ என அவரிடம் கேட்க, ‘தாய் சொல்லைத் தட்டாதே படம் தெய்வமே’ என தேவர் சொல்ல ‘படத்தில் ஹீரோவாக யார் நடிக்கிறார்?’ என எம்.ஜி.ஆர் கேட்க, ‘அது இன்னும் முடிவாகவில்லை’ என தேவர் சொல்லி இருக்கிறார்.
உடனே எம்.ஜி.ஆர் ‘நான் இந்த படத்தில் நடிக்கட்டுமாண்ணே’ என கேட்க, பழம் நழுவி பாலில் விழுந்த சந்தோஷத்தில் ‘அதுக்கென்ன.. உங்களுக்கு இல்லாததா?.. நீங்க தாராளமா நடிங்க’ என சொல்லி இருக்கிறார் தேவர். அந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது. அதன்பின் தேவரும், எம்.ஜி.ஆரும் மீண்டும் நண்பர்களாக மாறினார்கள்.