Cinema History
சிவாஜிக்காக எம்.ஜி.ஆர் விட்டு கொடுத்த படம்!. அது அது சூப்பர் ஹிட் படமாச்சே!…
தமிழ் சினிமாவில் இரு பெரும் ஆளுமையாக இருந்தவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி. எம்.ஜி.ஆர். ஆக்ஷன் கதைகளில் நடித்தால் சிவாஜி குடும்பபாங்கான செண்டிமெண்ட் கதைகளில் நடிக்க துவங்கினார். எம்.ஜி.ஆர் படங்களும், சிவாஜி படங்களும் கதை அளவில் பெரிய வித்தியாசம் கொண்டவை. சிவாஜி உருகி உருகி நடித்து ரசிகர்களை கவர்ந்தால் எம்.ஜி.ஆர் அசால்ட்டாக நடித்து, ஆக்ஷன் காட்சிகளில் தூள் கிளப்பி ரசிகர்களை உருவாக்கினார். ஆனால், இருவருக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை இருந்தது எனில் இது இருவருமே சரித்திர கதைகளில் நடிக்க ஆசைப்பட்டனர். இருவரும் பல சரித்திர கதைகளில் நடித்துள்ளனர்.
1939ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் The man in the iron mask. 18 வருடங்களுக்கு பின் இப்படத்தின் கதையை அடிப்படையாக வைத்து உத்தம புத்திரன் என்கிற கதையை ஸ்ரீதர் உருவாக்கினார். அப்போது அவர் இயக்குனராகவில்லை. கதை, வசனம் மட்டுமே எழுதிக்கொண்டிருந்தார். உத்தம புத்திரன் கதையில் சிவாஜியை இரண்டு வேடங்களில் நடிக்க வைத்து, இயக்குனர் ராம்நாத்தை வைத்து இயக்க வைக்கலாம் என ஸ்ரீதர் கணக்குபோட்டார்.
இதை அவர் ராம்நாத்திடம் கூறிய போது, இதே கதையில் எம்.ஜி.ஆரும் நடிக்க ஆசைப்படுகிறார். நான் இயக்க வேண்டும் என விரும்புகிறார் என சொன்னதும் ஸ்ரீதர் அதிர்ச்சி அடைந்தார். ஆனாலும், தனது முடிவில் உறுதியாக இருந்த ஸ்ரீதர் அடுத்த நாள் வீனஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராம்நாத் இயக்க சிவாஜி இரட்டை வேடங்களில் நடிக்கும் உத்தம புத்திரன் என்கிற விளம்பரம் அனைத்து செய்தி தாளிலும் வந்தது.
இதைக்கண்ட எம்.ஜி.ஆர் சிவாஜிக்காக அந்த படத்தை விட்டுக்கொடுத்தார். ஸ்ரீதர் கதை, திரைக்கதை எழுத, ராம்நாத் இயக்க, சிவாஜி நடிப்பில் 1958ம் வருடம் வெளியான உத்தம புத்திரன் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.