தமிழ் சினிமாவில் கலைவாரிசு என எம்ஜிஆரால் பாராட்டப்பட்டவர் நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ். அன்றைய காலகட்டம் வரை சினிமாவில் ஒரு புதுமையை புகுத்தியவர் பாக்யராஜ். சினிமாவிற்காக பாக்யராஜின் அர்ப்பணிப்புகள் ஏராளம். இயக்குனராக நடிகராக கதாசிரியராக வசனகர்த்தாவாக என பல திறமைகளை ஒருங்கே பெற்றவர்.
எம்ஜிஆருக்கும் மிகவும் பிடித்தமானவராக விளங்கினார் பாக்யராஜ்.ஆனால் அந்த பாக்யராஜ் படத்தாலேயே எம்ஜிஆர் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகியிருக்கிறார். பாக்யராஜ் , அம்பிகா நடிப்பில் வெளிவந்த படம்தான் ‘அந்த ஏழு நாள்கள்’ திரைப்படம். மேலும் இந்தப் படத்தை பாக்யராஜே இயக்கவும் செய்திருந்தார்.
இதன் தயாரிப்பு பணியில் பின்னனியில் இருந்தவர் ஆர்.எம்.வீரப்பனாம். படத்தின் கதைப்படி ஹீரோயின் எதுக்கும் ஆகாத மலையாளி பாடகரை காதலிக்க சூழ்நிலை ஒரு மருத்துவருக்கு இரண்டாம்தரமாக மனைவியாக்கப்படுகிறாள்.மேலும் படத்தில் அந்த மலையாளி பாடகர்தான் ஹீரோ. அதாவது பாக்யராஜ்தான் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இதையும் படிங்க :ரஜினி அழைத்தும் நடிக்க மறுத்த அந்த ஹீரோ.. தலைவருக்கே ஆட்டம் காட்டிய நடிகர்!
பாக்யராஜ் அறிமுகம் செய்யும் போது முதலில் ஒரு எருமை மாட்டை காட்டி அதன் பின்னாடி ஹீரோ வருவது போல காட்டியிருப்பார். இதுதான் எம்ஜிஆருக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தியதாம். ஏனெனில் எம்ஜிஆர் அடிப்படையில் ஒரு மலையாளி.
அதுமட்டுமில்லாமல் டாக்டரான ராஜேஷை திருமணம் செய்தாலும் எதுக்கும் ஆகாத அந்த மலையாளியான பாக்யராஜை நினைத்துக் கொண்டிருப்பார் அம்பிகா. இதை வைத்து எம்ஜிஆர் ‘டாக்டர் கலைஞரை மக்கள் ஒதுக்கி இந்த மலையாளி எம்ஜிஆர் பின்னாடி தான் மக்கள் ஓடுகிறார்கள்’ என்பது போல் காட்டப்பட்டிருக்கிறது என நினைத்துக் கொண்டாராம்.
உடனே ஆர்.எம். வீரப்பனை அழைத்து ஒரு பிடி பிடித்தாராம். மேலும் படத்தையும் தடை செய்ய வேண்டும் என நினைத்தாராம். ஆனால் அதே நேரத்தில் தான் அலைகள் ஓய்வதில்லை படமும் ரிலீஸ் ஆக வீரப்பனை பழிவாங்குவதற்காகவே அதிமுக சார்பில் ஒரு பெரிய விழாவை அலைகள் ஓய்வதில்லை படத்திற்காக எடுத்தாராம் எம்ஜிஆர். இந்த தகவலை பிரபல திரை விமர்சகர் காந்தராஜ் கூறினார்.
இதையும் படிங்க : அப்படி கூப்பிடாதீங்க ப்ளீஸ்!.. பலவருடங்களுக்கு முன்பே சொன்ன ரஜினி.. இவரயா அடிக்கிறீங்க!..
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…