ராமச்சந்திரா உன் அரசியலை வெளிய வச்சிக்கோ!.. எம்.ஜி.ஆரிடம் எகிறிய எம்.ஆர்.ராதா!..

by சிவா |   ( Updated:2024-05-25 09:25:17  )
mgr
X

நாடக உலகில் எம்.ஜி.ஆருக்கும் சீனியர் எம்.ஆர்.ராதா. சிவாஜியை அழைத்துக்கொண்டு சினிமா கம்பெனிகளுக்கு சென்று ‘இவன் எனக்கு தெரிந்த பையன். நன்றாக நடிப்பான். வாய்ப்பு கொடுங்கள்’ என கேட்டவர்தான் எம்.ஆர்.ராதா. எம்.ஜி.ஆரும், சிவாஜியும் வாலிப வயதில் நாடகங்களில் நடித்து வந்தபோது எம்.ஆர்.ராதா தனியாக நாடக கம்பெனியே வைத்திருந்தார்.

சினிமாவை விட நாடகத்தில் நடிப்பதில்தான் எம்.ஆர்.ராதாவுக்கு ஆர்வம் அதிகம். அதனால்தான் அவர் சினிமாவில் நடிக்க துவங்கிய பின்னரும் தொடர்ந்து நாடகங்களில் நடித்து வந்தார். எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் எம்.ஆர்.ராதா மீது அன்பும், மரியாதையும் உண்டு. இருவருமே அவரை ‘அண்ணே’ என்றே அழைப்பார்கள்.

இதையும் படிங்க: முதல்வர் ஆவதற்கு முன் நம்பியாருடன் எம்.ஜி.ஆர் போட்ட சண்டை!.. நடந்தது இதுதான்!..

இருவரையும் பெயர் சொல்லித்தான் அழைப்பார் எம்.ஆர்.ராதா. சிவாஜி, எம்.ஜி.ஆர் என இருவரின் படங்களிலும் எம்.ஆர்.ராதா பலமுறை நடித்திருக்கிறார். குறிப்பாக இருவரின் படங்களிலும் வில்லனாகவே வருவார். புதிய பறவை, பலே பாண்டியா, ஆலய மணி, பாலும் பழமும், படித்தால் மட்டும் போதுமா என பல படங்களில் சிவாஜியுடனும், பாசம் தாழம்பூ, பெரிய இடத்துப்பெண், கலங்கரை விளக்கம் என பல படங்களில் எம்.ஜி.ஆருடனும் எம்.ஆர்.ராதா நடித்திருக்கிறார்.

எம்.ஆர்.ராதா மிகவும் கோபக்காரர். கர்வமுள்ளவர். கோபம் வந்தால் உடனே துப்பாக்கியை எடுத்து சுட வேண்டும் என்கிற அளவுக்கு அவருக்கு கோபம் வரும். அதனால்தான் ஒரு சண்டையில் எம்.ஜி.ஆரையே சுட்டார். அதனால் சிறைக்கும் போனார். அவருக்கு பின் அவரின் மகன்கள் எம்.ஆர்.வாசு, எம்.ஆர்.ராதாரவி, ராதிகா, நிரோஷா என அவரின் வாரிசுகள் பலரும் சினிமாவில் நடிக்க வந்தனர்.

இதையும் படிங்க: சிவாஜிக்கு எம்.ஜி.ஆர் குரலில் பாடிய டி.எம்.எஸ்!.. இப்படி எல்லாம் கூட நடந்திருக்கா..?!

பெரியாரின் பகுத்தறிவு சிந்தனையை ஆதரித்தவர் எம்.ஆர்.ராதா. இவரின் நாடங்களில் முற்போக்கான, புரட்சிகரமான கருத்துக்கள் இடம் பெற்றிருக்கும். தன் நடிக்கும் படங்களில் அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சிப்பார். தொழிலாளி படத்தில் எம்.ஜி.ஆர் நடித்துகொண்டிருந்த போது தான் நடிக்கும் ஒரு காட்சியில் ‘நம்பிக்கை தரும் நட்சத்திரம்’ என்கிற வசனத்தில் திருத்தம் செய்ய விரும்பினார் எம்.ஜி.ஆர்

அப்போது அவர் திமுகவில் இருந்தார். எனவே, நம்பிக்கை தரும் உதயசூரியன் என சொல்ல நினைத்தார். ஆனால், இதை எம்.ஆர்.ராதா ஏற்கவில்லை. ‘ராமசந்திரா உன் அரசியலை இங்கே கொண்டு வராதே’ என சொல்லிவிட்டார். எம்.ஜி.ஆர் எவ்வளவு சொல்லியும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார். எனவே, நம்பிக்கை தரும் நட்சத்திரம் என்றே பேசினார் எம்.ஜி.ஆர்.

Next Story