Connect with us
mgr

Cinema History

இனிமேல் எல்லாம் முடிஞ்சி போச்சி… சூப்பர்ஸ்டாரை பார்த்து பயந்த எம்.ஜி.ஆர்!..

சினிமாவில் வாய்ப்பு என்பது சுலபமில்லை. அதுவும் ஹீரோ வாய்ப்பு என்பது சுலபத்தில் கிடைத்துவிடாது. ஏனெனில், அந்த வாய்ப்பை தட்டிப்பறிக்க பலரும் காத்திருப்பார்கள். ஒரு படத்தில் ஹீரோவாக ஒரு நடிகர் நடித்து படத்தின் பாதியில் அவர் தூக்கப்பட்டு அதன்பின் வேறு ஹீரோ நடித்து படங்கள் வெளியானது கூட பல முறை நடந்திருக்கிறது.

விக்ரமனின் இயக்கத்தில் விஜய் இரண்டாவதாக நடித்த திரைப்படம்தான் உன்னை நினைத்து. இந்த படத்தில் விஜய் சில நாட்கள் நடித்தார். ஆனால், கதை பிடிக்காமல் போனதால் இயக்குனரிடம் சொல்லிவிட்டு படத்திலிருந்து விலகினார். அதன்பின் அந்த படத்தில் சூர்யா நடித்திருந்தார்.

இதையும் படிங்க: ஒரு போட்டோவை வச்சி படத்தை ஹிட் ஆக்கிய எம்.ஜி.ஆர்!.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!..

சின்ன நடிகர்களுக்கு அது நடப்பது இயல்புதான். ஆனால், நம்மை தூக்கிவிட்டு வேறு ஹீரோவை போட்டு விடுவார்களோ என்கிற பயம் எம்.ஜி.ஆருக்கே ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா?. ஆனால், உண்மையில் அது நடந்திருக்கிறது. சிவாஜி போல முதல் படத்திலேயே கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு எம்.ஜி.ஆருக்கு அமையவில்லை.

10 வருடங்கள் சின்ன சின்ன வேடங்களில் நடித்தபின் சாயா என்கிற படத்தில் ஹீரோ வாய்ப்பு கிடைத்து சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஆனால், எந்த நேரத்திலும் நம்மை இப்படத்திலிருந்து தூக்கிவிடுவார்கள் என பயந்து கொண்டே அப்படத்தில் நடித்து வந்தாராம் எம்.ஜி.ஆர்

chaya

அவரின் பயத்தை உறுதி செய்வது போல ஒரு நாள் படப்பிடிப்பு தளத்திற்கு அப்போது சூப்பர்ஸ்டாராக இருந்த பி.யூ.சின்னப்பா வந்துவிட்டு போனார். உடனே அங்கிருந்தவர்கள் எம்.ஜி.ஆரிடம் ‘அவ்வளவுதான் இனிமேல் நீ ஹீரோ இல்லை. உன்னை தூக்கிவிட்டு சின்னப்பாவை ஹீரோவாக நடிக்க வைக்க தயாரிப்பாளர் திட்டமிட்டிருக்கிறார்’ என சொல்ல எம்.ஜி.ஆர் ஆடிப்போனார்.

இதையும் படிங்க: முதல் சந்திப்பிலேயே கேப்டனை ஆச்சர்யப்படுத்திய எம்.ஜி.ஆர்!.. நடந்தது இதுதான்!..

இவ்வளவு வருடங்கள் கழித்து கிடைத்து கிடைத்த வாய்ப்பு கையை விட்டு போய்விடுமோ என கலங்கிபோனார். ஆனால், அந்த படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் பி.யூ.சின்னப்பா மறுத்துவிட்டார். ஆனாலும், சாயா படத்தின் படப்பிடிப்பு ஒருகட்டத்தில் நின்று போனது. அதன்பின் எம்.ஜி.ஆரின் மீது நம்பிக்கை வைத்து அவரை ஹீரோ ஆக்கியவர் இயக்குனர் ஏ.எஸ்.ஏ.சாமி.

ராஜகுமாரி என்கிற படத்தில் எம்.ஜி.ஆரை ஹீரோவாக நடிக்க வைத்தவர் இவர். இந்த படத்தில் தியாகராஜ பகவாதரையும், பானுமதியையும் ஒப்பந்தம் செய்ய அப்படத்தின் தயாரிப்பாளர் தயாராக இருந்தார். ஆனால், ‘எனக்கு எம்.ஜி.ஆர் மட்டும் போதும். இப்படத்தை வெற்றி படமாக கொடுப்பேன்’ என சொல்லி படத்தை இயக்கினார் ஏ.எஸ்.ஏ.சாமி. இந்த படத்தில்தான் கலைஞர் கருணாநிதி எம்.ஜி.ஆருக்கு முதன் முதலாக வசனம் எழுதினார். இந்த படம் எம்.ஜி.ஆருக்கு ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இதற்கு பின் நடந்ததெல்லாம் சரித்திரம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top