காலங்காலமாக எம்ஜிஆர் கடைபிடித்து வந்த பழக்கம்!.. நிமிடத்தில் தகர்ந்தெறிந்த சரோஜாதேவி..

by Rohini |   ( Updated:2023-01-19 07:13:01  )
mgr
X

mgr

தமிழ் சினிமாவின் ஜாம்பவனாக 50களில் இருந்து கொடிகட்டி பறக்க தொடங்கியவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். இவரின் ராஜ்ஜியம் உலகளாவ பரவியதற்கு இவரின் கொள்கைகளும் நற்பண்புகளும் ஒரு விதத்தில் காரணமாக அமைந்திருந்தன.

mgr1

mgr1

ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைத்து தரப்பினரும் கொண்டாடும் ஒரு உன்னத நடிகராகவே வாழ்ந்து வந்தார் எம்ஜிஆர். இவர் நடிக்க ஆரம்பித்து ஒரு நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றவுடன் ஒரு பழக்கத்தை தன் வசம் வைத்திருந்தாராம். என்னவென்றால் அவரின் படப்பிடிப்பில் தினமும் முதல் ஷார்ட் எம்ஜிஆரை வைத்து தான் எடுக்க வேண்டுமாம்.

இதையும் படிங்க : சந்திரமுகி படமே வேஸ்ட்தான்??… தயாரிப்பாளரிடம் கேள்வி கேட்டு வம்பிழுத்த ரசிகர்…

இது ஓரளவுக்கு எம்ஜிஆர் சம்பந்தப்பட்ட பலருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தது. அதிலும் குறிப்பாக எம்ஜிஆருடன் ஏகப்பட்ட படங்களில் ஜோடியாக நடித்த சரோஜாதேவிக்கு தெரியாமல் இருக்குமா? ஆனால் அதை ஒரு சமயம் சரோஜாதேவியே உடைத்தெறிந்து விட்ட சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

mgr2

mgr2

ஒரு படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் எம்ஜிஆர் ஷார்ட்டுக்காக தயாராகி கொண்டிருந்தாராம். அப்பொழுது அந்த படத்தின் இயக்குனர் ஏசி.திருலோகச்சந்தர் , தயாரிப்பாளர் ஏவிஎம் நிறுவன அதிபர் சரவணன் ஆகியோர் அங்கு இருந்திருக்கின்றனர். வேகமாக வந்த சரோஜாதேவி மாலை நான் அவசரமாக வெளியூரில் ஒரு மீட்டிங் போக வேண்டியிருக்கிறது, அதனால் என்னுடைய ஷார்ட்டை முதலில் எடுத்து விடுங்கள் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் திருலோகச்சந்தருக்கும் சரவணனுக்கும் எம்ஜிஆரின் அந்த கொள்கை பற்றி தெரியாதாம். ஆகவே சரோஜாதேவி சொன்னதும் அவரை வைத்து முதல் ஷார்ட்டை எடுத்து விட்டனராம். மேக்கப் முடிந்து எம்ஜிஆர் வரும் போது செட்டில் இருந்த ஒருவர் நடந்ததை கூற எம்ஜிஆர் வேகமாக கோபப்பட்டு திரும்பவும் போய்விட்டாராம்.

mgr3

mgr avm saravanan

அதன் பிறகு தான் இவர்களுக்கு தெரிந்திருக்கிறது. அதன் பின்னர் சரவணனிடம் எம்ஜிஆர் ‘முதலாளி, நீங்களே இப்படி பண்ணலாமா?’ம் என்று கேட்க அதற்கு சரவணன் சரோஜாதேவி சொன்னதால் தான் அப்படி செய்தோம் என்று சொல்லியிருக்கிறார். ஏன் சரோஜா தேவிக்கு தெரியாதா? தெரிந்திருந்தும் இப்படி பண்ணிட்டாளே? என்று கொபமாக கத்தி அதன் பின் சாந்தமானாராம் எம்ஜிஆர். இதை ஏவிஎம் சரவணன் ஒரு பேட்டியின் போது தெரிவித்தார்.

Next Story