Actor mgr: எம்.ஜி.ஆர் 7 வயதிலேயே நாடகங்களுக்கு நடிக்க சென்றார். 30 வருடங்கள் நாடகங்களில் மட்டுமே நடித்தார். அதில், சரித்திர கதை முதல் சாதாரண குடிமகன் வரை பல கதாபாத்திரங்களிலும் அவர் நடித்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் அவர் ஏற்ற வேடத்தை விட நாடகத்தில் ஏற்ற கதாபாத்திரங்கள் மிகவும் அதிகம்.
அதில் அதிகமான நடித்தது சரித்திர கதைகளில்தான். அதனால்தான் அவர் சினிமாவில் நடிக்க துவங்கிய போது நிறைய சரித்திர கதைகளில் நடித்தார். அதுதான் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. ராஜகுமாரி, நாடோடி மன்னன், மதுரை வீரன், மன்னாதி மன்னன் என பல சரித்திர படங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: 5 ரூபாய் கடனை அடைக்க எம்.ஜி.ஆர் பட்ட பாடு!.. திருப்பி கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா?!
அதுவே அவருக்கு பிடித்தமானதுமாக இ்ருந்தது. ஏனெனில் சரித்திர கதைகளில் வாள் சண்டை போடலாம், அடுக்கு மொழியில் வசனம் பேசலாம் என்பது முக்கிய காரணமாக இருந்தது. நாடோடி மன்னன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய 2 திரைப்படங்களை எம்.ஜி.ஆர் தயாரித்து, இயக்கி நடித்துள்ளார்.
சிறு வயதிலேயே எம்.ஜி.ஆருக்கு சினிமா பற்றிய அறிவு அதிகமாக இருந்தது. சில நாடகங்களில் அவருக்கு தோன்றும் சொந்த வசனத்தையும் பேசி நடித்து ஆசானிடம் திட்டு வாங்கியுள்ளார். ஒருமுறை இராமாயணம் நாடகத்தில் எம்.ஜி.ஆர் நடித்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு 10 வயது இருக்கும்.
இதையும் படிங்க: கார் டிரைவரை கதாசிரியர் ஆக்கிய எம்.ஜி.ஆர்!.. பல ஹிட் படங்களில் கலக்கிய சம்பவம்!..
அந்த காட்சிப்படி காட்டுக்கு ராமன் போய்விட அவரின் தம்பி பரதன் இராமனின் பாதைகை அதாவது அவரின் கால் செருப்பை வைத்து ஆட்சி நடத்துவது போல் காட்சி வரும். அந்த காட்சியில் பரதனாக நடித்த எம்.ஜி.ஆரிடம் தனது செருப்பை கழட்டி கொடுத்து தலையில் வைத்து நடக்குமாறு சொன்னார் நாடக வாத்தியார்.
அதற்கு ‘நானோ சிறுவன். என் தலையில் இவ்வளவு பெரிய செருப்பை வைத்து நடித்தால் நாடகம் பார்ப்பவர்கள் சிரிக்க மாட்டார்களா?’ என லாஜிக்கான கேள்வியை கேட்டவர்தான் எம்.ஜி.ஆர். ஒரு காட்சியில் எப்படி நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்பதை 10 வயதிலேயே எம்.ஜி.ஆர் புரிந்து வைத்திருந்ததுதான் ஆச்சர்யம்.
இதையும் படிங்க: வாலியின் பாடல் பிடிக்காமல் கண்ணதாசனிடம் போன எம்.ஜி.ஆர்!… அட அந்த பாட்டா?!..
மருத்துவராக இருந்தாலும்…
ஆர் ஜே…
Pushpa 2:…
சமீபத்தில் தனுஷ்,…
ஏ ஆர்…