எம்ஜிஆர் கண்ணை திறந்து வைத்த அந்த பிரபலம்! மக்களுக்காக அள்ளி அள்ளிக் கொடுக்க இதுதான் காரணமா?

by Rohini |
mgr
X

mgr

Actor MGR: சினிமாவிலும் சரி பொது வாழ்விலும் சரி என்றும் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவராக இருக்கிறார் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். பெரும்பாலான நடிகர்கள் இன்று அரசியலுக்கு வரவேண்டும் என விரும்புகிறார்கள். அதற்கு விதை போட்டதே எம்ஜிஆர்தான். சினிமாவிலும் ஜெயித்து அரசியலிலும் வெற்றி வாகை சூடியவராக இருந்தார் எம்ஜிஆர்.

ஆனால் அவருக்கு பிறகு அந்த ஒரு பெருமை ஜெயலலிதாவிற்கு மட்டுமே கிடைத்தது. எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி இவர்களுக்கு பிறகு சினிமாவில் இருந்து எந்தவொரு பிரபலமும் அரசியலில் தடம் பதிக்க முடியவில்லை. கமல் கட்சி இருக்கிறதே தவிற அந்த ஒரு இடத்தை அவரால் அடைய முடியவில்லை. அடுத்ததாக விஜய் களமிறங்க இருக்கிறார்.

இதையும் படிங்க: கோலாகலமாக பிறந்தநாளை கொண்டாடிய நெப்போலியன்! சென்னையிலிருந்து அமெரிக்காவிற்கு பறந்த சர்ப்ரைஸ் கிஃப்ட்

எம்ஜிஆர் ஒரு வசதியான வாழ்க்கையை வாழ்ந்தாலும் ஆரம்பத்தில் உடுத்த உடை இல்லாத அளவுக்குத்தான் இந்த சினிமாவிற்குள் வந்தார். அதன் பிறகு பல படங்களில் நடித்து மக்கள் தலைவனாக மாறி எட்டுத்திக்கும் அவர் பெருமை முழங்கியது. இப்படி இருந்த எம்ஜிஆர் தனக்கென்று வாழாமல் மக்களுக்காகவே வாழ்ந்தார்.

அதுமட்டுமில்லாமல் என்.எஸ்.கேவிற்கு பிறகு தான் சம்பாதித்த பெரும் தொகையை மக்களுக்காக அள்ளி அள்ளி கொடுத்தவர் எம்ஜிஆர். இதைப் பற்றி ரசிகர் ஓருவர் எம்ஜிஆரிடம் ‘உங்களுக்கென்று ஒன்றும் வைத்துக் கொள்ளாமல் ஏன் எல்லாவற்றையும் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள்?’ என கேட்டாராம்.

இதையும் படிங்க: தனுஷ் கதை சொன்னப்போ அசால்ட்டா நினைச்சேன்.. ஆனா ரிலீஸில் நானே ஷாக் ஆகிட்டேன்.. சுவாரஸ்யம் சொல்லும் நடிகை..!

அதற்கு எம்ஜிஆர் ‘கடைசிவரை பணம் நம் கூடவா வரப் போகுது? அதுமட்டுமில்லை. நாம் இப்போது பேசிக் கொண்டிருக்கும் இந்த ஜூபிடர் ஸ்டூடியோ இருக்கே அது ஒரு காலத்தில் சோமுவினுடையது. ஆனால் இப்போது அந்த ஸ்டூடியோவில் நானும் ஒரு பங்குதாரராக இருக்கிறேன். அறிவிலும் ஆற்றலிலும் வல்லவராக இருந்த சோமுக்கே இந்த நிலைமை என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்? ’

‘அவர் மூலமாகத்தான் இதை நான் உணர்ந்தேன். மேலும் நாமே நம் சொத்தை பாதுகாக்க முடியவில்லை. அரசால் எப்படி பாதுகாக்க முடியும். அதுமட்டுமில்லாமல் இந்த சொத்துக்கள் எல்லாம் மக்கள் மூலமாகத்தான் எனக்கு கிடைத்தது. அந்த மக்களுக்கே திரும்ப கொடுப்பதில் மிகவும் மகிழ்ச்சிக் கொள்கிறேன்’ என கூறினாராம் எம்ஜிஆர்.

இதையும் படிங்க: அஜித்துடன் சேர்ந்து போட்டோதானய்யா எடுத்தேன்! மூட்டைக் கட்டி மொத்தமா வழியனுப்பி வைத்த ‘விடாமுயற்சி’ டீம்

Next Story