கொள்கைன்னா இப்படி இருக்கணும்...இந்த விஷயத்தில் எம்ஜிஆரை மிஞ்ச ஆளே இல்லை...!

by sankaran v |
எம்.ஜி.ஆர்
X

MGR

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் எப்போதும் கொள்கைப் பிடிப்பில் உறுதியானவர். அது யாராக இருந்தாலும் தான் எடுத்துக்கொண்ட கொள்கைகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்காதவர். அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை டைரக்டர் ராமண்ணா சுவைபட சொல்கிறார்.

சிவகாமி பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதலாளி முனிரெத்ன முதலியார். அவரும் கலைஞரும் ஒருமுறை பேசிக் கொண்டிருந்தனர். அப்போது விரக்தியாக முனிரெத்ன முதலியார் இந்தப் படத்தொழிலுக்கு வந்ததே பித்துக்குளித்தனம் என்று அலுத்துக் கொண்டார்.

அதற்கு கலைஞர் நீங்கள் சாதாரண பித்தனாக இருக்க வேண்டாம். ஒரு புதுமையான கதை தருகிறேன். அதை எடுத்து புதுமைப்பித்தனாக மாறுங்கள் என்றார். அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். அதுவே பின்னர் தலைப்பாக மாறியது.

தொடர்ந்து முதலியார் என்னையும், எம்ஜிஆரையும், கலைஞரையும் ஒப்பந்தம் செய்த அவர் புதுமைப்பித்தனைத் துவக்கினார். படம் வெற்றிகரமாக ஓடியது. இதில் எம்ஜிஆர் ஜீவகனாக நடித்து அசத்தினார்.

Puthumaipithan

டி.ஆர்.ராஜகுமாரி இன்பவல்லி என்ற பெயரில் ஜோடியாக நடித்தார். டி.எஸ்.பாலையா, பி.எஸ்.சரோஜா, சந்திரபாபு, ஈ.வி.சரோஜா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படம் 1957ல் வெளியானது.

மற்றொரு முறை நானோ, கட்டபொம்மன் தான். முடியவில்லை. காத்தவராயனையாவது எடுக்கலாம் என்று எம்ஜிஆரை அணுகி என் சொந்தப்படமாக காத்தவராயனைத் துவக்கினேன்.

முதல் நாள் படப்பிடிப்பின் போதே எம்ஜிஆரின் கொள்கைக்கும், காத்தவராயன் கதைக்கும் முரண்பாடு ஏற்பட்டது. காத்தவராயனோ ஒரு மந்திர தந்திர கதை.

எம்ஜிஆரோ மந்திரமாவது தந்திரமாவது எல்லாம் பொய்..என்ற கொள்கையை உடையவர்.

ஸ்டூடியோவில் செட் ரெடி. மற்ற நடிகர், நடிகைகள் எல்லாம் மேக் அப் போட்டு தயாராக இருந்தனர். காமிரா ரெடி. நானும் ரெடி. படப்பிடிப்பு தான் பாக்கி. அதற்குப் பதில் பிரச்சனை உருவாகி விட்டது.

காட்சியை அப்படியே வைத்துக் கொள்ளலாம். அதன் கருத்தை மட்டும் மாற்றிக் கொள்ளலாம். மந்திரத்தால் செய்து காட்டப்படுவதை மனிதனுடைய தந்திரத்தாலோ..சாதுரியத்தாலோ செய்து காட்டப்படுவதாக வைத்துக் கொள்ளலாம் என்றார் எம்ஜிஆர்.

Aryamala

புதிய கதை என்றால் நீங்கள் சொல்லும் படி மாற்றலாம். காத்தவராயனோ மிகவும் பிரபலமான கதை. பி.யு.சின்னப்பா நடித்து வெளிவந்த சிறந்த படங்களில் அதுவும் ஒன்று. ஆர்யமாலா என்ற பெயரில் வெளியான இந்தப் படம் அமோக வரவேற்பைப் பெற்றது.

இந்த காரணத்திற்காகத் தான் அந்தக் கதையை மீண்டும் படமாக்க முன்வந்தேன். அதில் மாற்றம் செய்வது என்பது வம்பை விலை கொடுத்து வாங்குவதற்குச் சமம் என்றேன்.

Kathavarayan

உடனே தற்சமயம் படப்பிடிப்பை ரத்து செய்யுங்கள். யோசனை செய்து பிறகு முடிவு செய்யலாம் என்ற எம்ஜிஆர் அங்கிருந்து சென்றுவிட்டார். அதன் பிறகு அந்தக்கதையில் நடிக்க சம்மதிக்கவே இல்லை.

கொள்கைப்பிடிப்பில் உறுதியாக இருப்பவர் எம்ஜிஆர் என்பதற்கு இதுவே சாட்சி.

அதன்பின் சிவாஜியை வைத்து அந்தப் படத்தை எடுத்தார் ராமண்ணா என்பது குறிப்பிடத்தக்கது. 1958ல் வெளியானது.

Kathavarayan 3

அதன் பின் அதே பெயரில் கரன் நடிப்பில் 2008ல் காத்தவராயன் படம் வெளியானது. இந்தப்படத்தை இயக்கியவர் சலங்கை துரை.

Next Story