எம்ஜிஆர் அழைத்தும் நடிக்க மறுத்த நாட்டிய மங்கை!.. அவங்க சொன்ன காரணம் தான் ஹைலைட்!..

mgr
தமிழ் சினிமாவில் மாபெரும் சக்தியாகவே வலம் வந்தவர் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர். ஒரு காலத்தில் நாடகத்தில் இருந்து வந்த இவர் வெள்ளித்திரையில் வெற்றிப்பயணத்தை உறுதி செய்து அதன் பின் ஒரு வசூல் சக்கரவர்த்தியாகவே மாறினார்.

mgr
இலங்கையில் இருந்து வந்து ஒட்டு மொத்த தமிழக மக்களையும் தன் அன்பால் கட்டிப்போட்டவர். அவர்களுக்காகவே கடைசி வரை வாழ்ந்தவர். தன் கொடை திறமையால் பல பேர் வாழ்க்கையில் வசந்தத்தை வீசியவர். சினிமாவில் இருக்கும் போதே இந்த பண்புகளை வாய்க்க பெற்ற எம்ஜிஆர்
இதையும் படிங்க : கமல் மிகவும் பிடிவாதக்காரர்!.. அந்த விஷயத்தில ரஜினி சூப்பர்!.. கமலால் வேதனையடைந்த பிரபலத்தின் ஆதங்கம்!..
அரசியலில் புகுந்த போதும் இன்னும் மேலும் அதிகமாகியது. மேலும் சினிமாவில் இவருக்கு என்று ஒரு பாணி இருக்கின்றது. டைரக்டர் முதல் மேக்கப் மேன் வரைக்கும் எம்ஜிஆருக்கு என்று ஒரு கூட்டமே தன்னுள் வைத்திருப்பார். மேலும் இவர் சொல்வதை தட்டாமல் செய்யும் சினிமாவாகவே மாறியது.

mgr
இப்படி ஒரு அன்பான ராஜ்ஜியத்தை செய்து கொண்ட எம்ஜிஆர் நாட்டியத்தில் புகழ் பெற்ற ஒரு பெண்ணை நடிக்க அழைத்திருக்கிறார். ஆனால் எம்ஜிஆர் அழைத்தும் அந்த பெண் வர மறுத்துவிட்டார். அவர சினிமாவில் பிரபல இயக்குனராக இருந்த சுப்பிரமணியம் என்பவரது மகள் தான்.
அவர் பெயர் பத்மா சுப்பிரமணியம். அவர் அரங்கேற்றத்தை ஒரு முறை பார்த்த எம்ஜிஆர் சுப்பிரமணியனிடம் உங்கள் மகள் மிகவும் அழகாக இருக்கிறார். நடிக்க வைக்கலாமே என்று கேட்க அதற்கு சுப்பிரமணியம் அது அவளுடைய விருப்பம் என்று கூறிவிட்டாராம்.
உடனே எம்ஜிஆரே பத்மாவிடம் கேட்டிருக்கிறார். ஆனால் பத்மாவோ சினிமாவில் அவர்கள் சொல்வதை தான் கேட்க வேண்டும். தன் விருப்பப்படி இருக்க முடியாது அதுவும் இல்லாமல் எனக்கு நாட்டியத்தின் மீது தான் அலாதி விருப்பம். நடிக்க விருப்பம் இல்லை என்று கூறிவிட்டாராம்.

padhma subramaniyam
பின்னாளில் பத்மா சுப்பிரமணியம் உலக அரங்கில் பெரும் புகழும் பெற்று விளங்கினார்.இப்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். வாழ் நாள் முழுவதையும் அந்தக் கலைக்கே அர்ப்பணித்துக் கொண்டார் பத்மா சுப்பிரமணியம்.