பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க முயன்ற எம்ஜிஆர்... தோல்வியில் முடிய இதுதான் காரணமா?..

MGR
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அந்தக் காலத்தில் அரசர் கதை அம்சம் கொண்ட படங்கள் நடித்தால் எல்லாமே சூப்பர்ஹிட் தான். அவரது வாள்வீச்சும், பஞ்ச் டயலாக்குகளும், பாடல் காட்சிகளும் பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
அரசகட்டளை, மகாதேவி, மதுரை வீரன், நாடோடி மன்னன், ராஜா தேசிங்கு, புதுமைப் பித்தன், ராணி சம்யுக்தா ஆகிய படங்கள் அவருடைய அரசர் கால படங்களில் பெயர் பெற்றவை. அரசகட்டளை படத்தில் அவர் ஆல மர விழுதைப் பிடித்து தொங்கிய படி எங்கெங்கோ தாவித் தாவி செல்வார். அவரது உடை அலங்காரமே பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இருக்கும்.
இதையும் படிங்க... மலேசியா வாசுதேவனுக்கு விடியலை கொடுத்த இளையராஜா… எப்படின்னு தெரியுமா?
குட்டைப்பாவாடை போட்ட படி பறந்து பறந்து சண்டை போடுவதும், வாளைப் பின்புறமாக சுழற்றும் அந்த ஸ்டைலும் வேறு எந்த நடிகருக்கும் பொருந்தாது. அதனால் தான் ஏராளமான ரசிகர்கள் வட்டம் அவருக்கு இருந்தது. இளம் ரசிகர்களுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்பதை விரல் நுனியில் தெரிந்து வைத்து இருந்தார் எம்ஜிஆர்.
1958ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் கல்கியிடம் இந்தக் கதையைத் திரைப்படமாக எடுக்க உரிமை கோரினார். அதற்காக 10 ஆயிரம் ரூபாயும் கொடுத்து கதையின் காப்புரிமையை வாங்கினார். அதுவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தான் அப்படி வாங்கினாராம்.
அந்தக் கதையையும் எம்ஜிஆர் தானே இயக்குவதாக முடிவு செய்தார். அதற்காக வைஜெயந்தி மாலா, ஜெமினிகணேசன், பத்மினி, சரோஜாதேவி, எம்என்.ராஜம், டி.எஸ்.பாலையா, நம்பியார் ஆகியோரும் நடிகர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். படமும் எடுக்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்போது எம்ஜிஆருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. இதனால் படமும் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு 4 ஆண்டுகள் முயற்சித்துப் பார்த்தார். ஆனாலும் படத்தை எடுக்கவே முடியவில்லை. இந்தப்படத்தில் வந்தியத்தேவனாக எம்ஜிஆர் நடிப்பதாகவும் இருந்ததாம்.
இதையும் படிங்க... ஏழாம் அறிவு சூர்யாவின் மகனாச்சே!.. அந்த வித்தையிலும் சாதனை படைத்த தேவ்!.. அப்பா செம ஹேப்பி!..
1950ல் இருந்து 1954 வரை கல்கி வார இதழில் கல்கி கிருஷ்ணமூர்த்தி பொன்னியின் செல்வன் நாவலை பதிவிட்டார். 1956ல் இந்த நாவல் 5 பாகங்கள் கொண்ட ஒரே புத்தகமாக வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 1994ல் கமல், மணிரத்னம் கூட்டணி முயற்சித்து அதுவும் கைவிடப்பட்டது. கடைசியாக அதை எடுத்தே தீருவேன் என்ற உறுதியோடு மணிரத்னமே அதை எடுத்து முடித்தார்.