நாடோடி மன்னன் படத்திற்கு ஏன் இப்படி பெயர் வைத்தார் எம்.ஜி.ஆர்.. கசிந்த சுவாரஸ்ய தகவல்
எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான நாடோடி மன்னன் படத்திற்கு அந்த பெயரினை அவர் வைத்த சுவாரஸ்யமாக சம்பவம் ஒன்று வெளியாகி இருக்கிறது.
எம்.ஜி.ஆரின் வளர்ச்சி ஆரம்பத்தில் மெதுவாக தான் துவங்கியது. சரியான பாதையில் எடுத்து சென்றவர் 30 வருடமாக கோலிவுட்டில் கோலோச்சி இருந்தார். சதிலீலாவதி படத்தின் மூலம் சினிமாவிற்கு வந்தவர் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரின் கரியரில் முக்கியமான இடத்தைப் பிடித்த படம் நாடோடி மன்னன். அதற்கு காரணமாக பார்க்கப்பட்டது அப்படத்தில் அவரே நடித்து இயக்கி இருந்தார். அதுமட்டுமல்லாமல் அப்படத்தினை எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் சார்பில் தனது சகோதரர் எம்.ஜி.சக்கரபாணி மற்றும் ஆர்.எம்.வீரப்பனோடு இணைந்து தயாரித்தார்.
மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டது நாடோடி மன்னன். படத்தில் நடித்துக் கொண்டிருந்த பானுமதி உள்ளிட்ட கலைஞர்களுக்கு ஏன் இத்தனை செலவு செய்கிறார் என சந்தேகம் எழுந்தது. அப்போது எம்ஜிஆர், இப்படம் வெற்றி அடைந்தால் நான் மன்னன். இல்லை நாடோடி தான் என விளக்கம் அளித்தார்.
படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்தாலும் ரிலீஸ் தள்ளி போனது. பல்வேறு தடைகளைத் தாண்டி வெளியான நாடோடி மன்னன் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது. வெள்ளிவிழா படமாக மட்டுமல்லாமல் அவர் கூறியது போல மன்னனாகவும் மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.