Connect with us
mgr janaki

Cinema History

பிடிவாதம் பண்ணிய எம்ஜிஆர் மனைவி… ஆனால் கடைசில கிடைச்ச வாய்ப்பை மிஸ் பண்ணிட்டாங்களே!…

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் என்றால் தெரியாதவர்கள் என இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு தன்னை மக்களிடையே நிரூபித்து காட்டியவர். இவர் நடிகரை தாண்டி நல்ல மனம் கொண்டவராகவும் திகழ்ந்தார்.

இவர் 2 திருமணம் செய்திருந்தாலும் இவருக்கு அந்த வாழ்க்கை நிலைத்து நீடிக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். ஆனால் அதன்பின் இவர் காதலித்து திருமணம் செய்தவர்தான் நடிகை ஜானகி. இவர் அந்த காலத்தில் முன்னணியில் இருந்த கதாநாயகியும் கூட.

இதையும் வாசிங்க:மகளுக்காக மீண்டும் ரெடியாகும் ரஜினி!.. குட்டிக்கதை ரெடியா சார்?!.. கேப்பு விடாம அடிச்சா எப்படி!..

இவர்கள் இருவரும் இணைந்து மோகினி திரைப்படத்தில் நடித்திருந்தனர். பின் ஜானகி எம்ஜிஆரின் கடைசி காலம் வரையிலும் அவருடன் இருந்தார். மேலும் இவர் சினிமாவின் மீது மிகவும் ஆர்வம் கொண்டவர். எம்ஜிஆருக்கு இவர் முதல் மனைவி இல்லை என்பதுபோல் இவருக்கு எம்ஜிஆர் முதல் கணவர் அல்ல.

இவர் தனது சிறுவயது முதலே சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டராம். இவர் நடித்த முதல் திரைப்படம் இன்ப சாதனம். இப்படத்தில் நடிக்க இவருக்கு முதலில் வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் இவரது தந்தை இதற்கு சம்மதிக்கவில்லையாம். ஆனால் பிடிவாதம் கொண்ட ஜானகியே கடைசியில் அதில் வென்றுள்ளார்.

இதையும் வாசிங்க:தனது அப்பா கெட்டப்பில் ரஜினி நடித்த படம்!.. அப்பா மேல இவ்வளவு பாசமா?!..

இவரது தந்தையை சமாதானம் செய்து அப்படத்தில் நடித்துள்ளாராம். ஆனால் அந்த அளவு போராடியும் இவருக்கு அந்த அதிர்ஷடம் கைக்கு எட்டவில்லையாம். இவர் நடித்த இன்ப சாதனம் திரைப்படத்தினை தயாரித்து கொண்டிருக்கும் போதே அப்படத்தின் முதல்பாதி ஃபிலிம் எரிந்துவிட்டதாம். அதனால் அப்படம் வெளிவராலமே போய்விட்டதாம்.

ஆனால் சினிமா மீது தீராக்காதல் கொண்ட ஜானகிக்கு அடுத்து அமைந்த திரைப்படம்தான் கிருஷ்ணன் தூது. இப்படம் கிடைத்ததே இவருக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமாக அமைந்துள்ளது. இப்படத்திற்கு பின் சாவித்ரி, தியாகி போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். பின் சில காலத்திற்கு பின் இவர் கணபதி பட் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் இந்த உறவு நீடித்து நிலைக்கவில்லை. அதன் பின் எம்ஜிஆருடன் ஏறபட்ட பழக்கத்தினால் பின்னாளில் அவரை திருமணம் செய்து கொண்டாராம்.

இதையும் வாசிங்க:விசுவுக்கு ஏவிஎம் நிறுவனம் கொடுத்த மிகப்பெரிய கௌரவம்!.. மனுஷன் வாழ்நாள் முழுக்க மறக்கலயாம்!..

google news
Continue Reading

More in Cinema History

To Top