தன்னை அவமதிப்பவர்களை எம்ஜிஆர் எப்படி பழிவாங்குவார் தெரியுமா?.. ஆத்தாடி இது வேறலெவல்!...
தமிழக மக்களால் பொன்மனச்செம்மல். மக்கள் திலகம், புரட்சித்தலைவர் என அன்பாலும் அக்கறையோடும் அழைக்கப்படுபவர் நமது எம்ஜிஆர். மக்களின் முழு ஆதரவை பெற்று அரசியலிலும் சரி சினிமாவிலும் சரி மிகுந்த மக்கள் செல்வாக்குடன் வலம் வந்தார் எம்ஜிஆர். இவரின் சாதனைகளுக்கு அடித்தளமாக விளங்கியது எம்ஜிஆரின் கடின உழைப்பு தான்.
மிகவும் ஏழ்மை நிலையில் இருந்து வந்து நாடகத்தில் தன் திறமையை வளர்க்க தொடங்கினார் எம்ஜிஆர். பல்வேறு நாடக மேடைகளில் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார். நாடகத்திலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி அனைவரையும் வாய்பிளக்க வைத்தார். இந்த சாதனையே பின்னாளில் சினிமாவில் நடிக்க உந்துதலாக அமைந்தது.
இவரின் நடிப்பில் வெளிவந்த முதல் படம் சதிலீலாவதி. நடித்த முதல் படமே வெற்றிப்படமாக அமைந்தது. கதாநாயகனாக நடித்த முதல் படம் ராஜகுமாரி. இந்த படமும் வெற்றிப்படமாக அமைந்தது. இவரின் படங்கள் வெற்றியோ தோல்வியோ எதுவாக இருந்தாலும் அதை மக்கள் வரவேற்க தயாராக இருந்தார்கள்.
இதையும் படிங்க : ‘நல்ல நடிகன்’யா நீ… டைரக்டரின் நடிப்பை பார்த்து மிரண்ட நடிகர் திலகம்!..
அதற்கு காரணம் எம்ஜிஆர் மீது மக்கள் வைத்திருந்த பக்தி தான். ஒரு நேரத்தில் தங்கள் கடவுளாகவே பார்க்க தொடங்கினார்கள் தமிழக மக்கள். எல்லாவற்றிலும் முழுமையை எதிர்பார்க்கும் எம்ஜிஆர் தன்னை அவமதிப்பவர்களை மட்டும் விட்டு விடுவாரா என்ன? அப்படி ஒரு நிகழ்வு அவரின் வாழ்க்கையில் நடந்துள்ளது.
ஆரம்பத்தில் சினிமாவிற்கு எம்ஜிஆர் புதிது என்பதால் மற்ற முன்னனி நடிகர்களுக்குதான் மரியாதை கொடுப்பார்கள். ஏன் படப்பிடிப்பில் பணிபுரியும் தொழில் நுட்ப கலைஞர்களில் இருந்து பணியாட்கள் வரை அப்படி தான் நடந்து கொள்வார்கள். எம்ஜிஆர் படப்பிடிப்பில் இருக்கும் போது எப்போதுமே தன்னுடைய சூட்டிங் முடிந்தாலும் எங்கேயும் போக மாட்டாராம்.
ஏனெனில் திடீரென தன்னை அழைத்து அந்த இடத்தில் தான் இல்லாமல் போனால் கிடைத்த வாய்ப்பும் பறிபோய் விடுமே என்ற காரணத்தினால் அங்கேயே தான் இருப்பாராம். ஒருமுறை படப்பிடிப்பில் அப்படி இருக்கும் போது எம்ஜிஆருக்கு கடும் தாகம் ஏற்பட்டுள்ளது. அது நெப்டியூன் ஸ்டூடியோவில் நடைபெற்ற படப்பிடிப்பு. இவருக்கு தாகமாக இருக்கும் போது அந்த ஸ்டூடியோவின் பணியாளான அப்பன் ஒரு கூஜாவில் எதையோ கொண்டு வந்திருக்கிறார்.
எம்ஜிஆர் அப்பனிடம் தாகமாக இருக்கிறது. அதில் இருக்கும் நீரை கொஞ்சம் கொடுங்கள் என்று கூற அதற்கு அப்பன் மிகுந்த எரிச்சலுடன் ‘என்னய்யா நீ இது உள்ள இருக்கும் நடிகருக்காக கொண்டு போகிற ஜூஸ், உனக்கெல்லாம் கொடுக்க முடியாது’ என்று கூறிவிட்டாராம். பின்னாளில் எம்ஜிஆர் உயர்ந்து வளர்ந்த பிறகு அதே ஸ்டூடியோவை விலைக்கு வாங்கி தன் தாயார் பெயரில் ஆரம்பித்திருக்கிறார்.
இதையும் படிங்க :நண்பன் படத்தை பார்த்துவிட்டு விஜய் மகன் செய்த வேலை… ஆடிப்போன தளபதி…
அப்பவும் அதே அப்பன் தான் வேலையில் இருந்திருக்கிறார். அவரை பார்த்ததும் எம்ஜிஆர் அப்பனை அழைத்திருக்கிறார். உடனே அப்பன் ஏற்கெனவே நடந்ததை எண்ணி வருந்தி ஒரு வேளை அதை நினைத்து நம்மை வெளியே அனுப்ப போகிறாரோ என்று பயத்திலேயே போயிருக்கிறார். ஆனால் எம்ஜிஆர் அவரின் சம்பளத்தை விசாரித்து கூடுதலாக 200 கொடுத்து 400 ரூபாய் சம்பளத்தில் அவரை வேலையில் வைத்திருக்கிறார்.
என்ன மாதிரியான உள்ளம் பாருங்க நம் புரட்சித்தலைவருக்கு!.