More
Categories: Cinema History Cinema News latest news

ஹீரோவாக முதல் படம்.. எம்.ஜி.ஆர் படத்துக்கு வந்த சோதனை.. என்ன ஆனது தெரியுமா?..

ராஜகுமாரி 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். ராஜகுமாரி எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதலாவது திரைப்படமும், மு. கருணாநிதி முதன் முதலாக வசனம் எழுதிய திரைப்படமும், ஏ. எஸ். ஏ. சாமி முதன் முதலில் இயக்கிய திரைப்படமும் ஆகும்.

MGR

எம்.ஜி.ஆரை கதாநாயக வைத்து படம் எடுக்க ஜூப்பிட்டர் நிறுவனத்திடம் இயக்குனர் சாமி பேசினார். அப்பொழுது ஜூப்பிட்டர் நிறுவனத்தில் மாத சம்பளத்தில் எம்.ஜி.ஆர், நம்பியார்,சுப்பையா ஆகியோர் வேலை செய்து வந்தனர். முதன் முறையாக கதாநாயகனாக நடிக்கப் போகிறோம் என்ற அளவில்லா மகிழ்ச்சியில் எம்.ஜி.ஆர் இருந்தார்.

Advertising
Advertising

MGR

பின்னர் கதையை படித்த பங்குதாரர் சோமு கதாநாயகனாக பி.யு.சின்னப்பா வைத்து எடுக்கலாம் என்று கூறிவிட்டார். இதை கேட்ட எம்.ஜி.ஆருக்கு வேதனை அளிக்க தொடங்கியது. பின்னர் படத்தின் இயக்குனர் சாமி நமது நிறுவனத்தின் ஆட்களை வைத்து படம் எடுத்தால் செலவு குறையும் என்று யோசனை கூறி படத்தை எடுத்தார். படம் 5000 அடிகள் வளர்ந்து வந்தது. படம் நன்றாக வளர்ந்து கொண்டு இருக்கையில் படத்தை பார்க்க சென்னையில் இருந்து பங்குதாரர் மொகைதீன் மற்றும் மேனேஜர் கோட்டா சீனிவாசனும் வந்தார்கள்.

அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லை என்பதால்’படம் நன்றாக இல்லை.. படத்தை நிறுத்துங்கள் என்றும் இதை வெளியிட்டால் ஜூப்பிட்டர் நிறுவனத்தின் பெயர் கெட்டுவிடும். எடுத்தவரை ஃபிலிம்களை எரித்துவிடுங்கள்’ என்று கூறிவிட்டனர். உடனே இயக்குனர் சாமி எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று பங்குதாரர் சோமுவிடம் கேட்டு முழு நீளப்படத்தையும் எடுத்து முடித்தார். பின்னர் படம் திரையரங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது புதுமுக வெற்றி கதாநாயகனாக எம்ஜிஆர் தனது திரை பயணத்தை தொடங்கினார்.

Published by
Sathish G

Recent Posts