Cinema History
தன்னை கண்டபடி திட்டிய சிவாஜி ரசிகருக்கு உதவிய எம்.ஜி.ஆர்… அட இது செம மேட்டரு!…
தங்களுக்கென தனித்தனி திறமைகளை வளர்த்துக் கொண்டு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கியவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன் இருவருக்கும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. இருவரது படங்களும் வெளிவரும்போது ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமே. இருவர்களையும் ஒப்பிட்டு ரசிகர்களிடையே போட்டி நிலவுவது இயல்பான ஒன்றாகும்.
1970களில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் சசிகுமார். இவர் காசேதான் கடவுளடா,அரங்கேற்றம், பாரத விலாஸ் போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு தீவிர சிவாஜி கணேசனின் ரசிகர் ஆவார். மேலும் சிவாஜி ரசிகர் மன்ற கூட்டங்களில் பலமுறை எம்.ஜி.ஆரை தாக்கி பேசியுள்ளார். இந்நிலையில் ஒரு நாள் சசிகுமாரின் மனைவி அடுப்படியில் சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் காப்பாற்ற சென்ற சசிகுமாருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. பின்பு உடனே இருவரையும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இச்செய்தியை கேட்ட எம்.ஜி.ஆர் மருத்துவமனைக்கு சென்று இருவரையும் சந்தித்தார். அப்பொழுது வாழ்வின் கடைசி நிமிடங்களில் இருந்த சசிகுமார் ”நான் உங்களை கடுமையாக தாக்கிபேசியுள்ளேன். ஆனால் அதெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் என்னை பார்க்க வந்துள்ளீர்கள் ”என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
அதற்கு எம்.ஜி.ஆர் ”அதைப்பற்றி எல்லாம் இப்பொழுது பேசலாமா” என்று வேண்டிய உதவிகளை செய்துவிட்டு சென்றாராம். எனினும் சசிக்குமாரும் அவரது மனைவியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்கள். தன்னை எதிர்ப்பவர்களையும் கருணை உள்ளம் கொண்டு காக்கும் மனிதநேயம் எம்.ஜி. ஆர் மட்டுமே.