எம்.ஜி.ஆரின் முதல் காதலுக்கு வயசு என்ன... யார் அந்த பெண்? ருசிகர பின்னணி.

by Akhilan |
எம்.ஜி.ஆர்
X

புரட்சி தலைவரின் கடைக்கண் பார்க்க பலர் தவம் இருந்து இருக்கிறார்கள். ஆனால் ஒரு பெண் எம்.ஜி.ஆரையே அவர் பின்னாடி சுற்ற வைத்த சம்பவம் கூட நடைபெற்று இருக்கிறது.

எம்.ஜி.ஆருக்கும் காதலுக்குமே ஆகாது. தன் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி காதலில் அத்தனை குளறுபடிகள் செய்தவர். அப்படி இருந்த நிலையில், இவருக்கும் ஒருநாள் காதல் பிறந்து இருக்கிறது. அப்போது அவருக்கு வயது பதினாறு. எம்.ஜி.ஆரின் வீட்டிற்கு அருகில் குடியிருந்த வீட்டின் மறுபுறத்தில் தங்கியிருந்த ஒரு பெண்ணை காதலிக்கத் தொடங்கினார்.

எம்.ஜி.ஆர்

அப்பெண்ணின் கவனத்தினை தன் பக்கம் திருப்ப பல முயற்சிகள் எடுத்திருக்கிறார். அந்த பெண்ணிடம் பேச ஒரு வழியை கண்டுபிடித்தாராம். எப்போதும் சாப்பாட்டு விட்டு இலையை போட அப்பெண் வெளியில் வருவதை வழக்கமாக கொண்டு இருந்தார். இதையறிந்த எம்.ஜி.ஆர் அவரிடம் பேச ஒருநாள் அப்பாதையில் கட்டில் போட்டுக்கொண்டு படுத்திருந்தாராம். இதை பார்த்த அவரின் தாய், என்னப்பா இப்போவே படுத்திட்ட எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார். தலைவலி அம்மா என சமாளித்து அனுப்பினாராம்.

சரியாக அப்பெண் வர பேசலாம் என எம்ஜிஆர் எழுந்திருக்கிறார். ஆனால், அவர் அம்மா மறித்து எங்கே போகிறாய்? இந்த மருந்தை தடவிக்கொண்டு கண்ணை முடிக்கொண்டு தூங்கு என்றாராம். இந்த காதல் கதையை தனது நண்பர்களுடன் எம்ஜிஆர் பகிர்ந்து கொண்டாராம். அங்கிருந்த அவர் நண்பர்கள் “வயதுக்கு வராத பெண்தானே” என்றனராம். அதுமட்டுமல்லாமல் எம்ஜிஆரின் காதல் குறித்தும் கிண்டல் செய்து பேச்சுகள் எழுந்தன. இதனால் எம்ஜிஆர் அவர்களுடன் இருக்காமல் உடனே கிளம்பினாராம்.

இதையும் படிங்க: மக்கள் திலகத்திற்கு கட்டளை போட்ட கலைவாணர்… விருப்பம் இல்லாமல் ஓகே சொன்ன எம்ஜிஆர்

அந்த சமயத்தில், எம்.ஜி.ஆர் காதலித்த பெண் வயசுக்கு வந்ததாக அங்கு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதையறிந்த எம்ஜிஆர் நண்பர்களிடம் இதுகுறித்தும் பகிர்ந்தாராம். இனி அவள் பின்னாடி சுற்றக்கூடாது. பொண்ணு வயசுக்கு வந்திடுச்சு என்றாராம். இதில் சற்று அதிர்ந்த நண்பர்கள் அதெல்லாம் இல்லை. காதல் காதலுனு அலைஞ்ச இப்போ என்னவாம் எனக் கேள்வி கேட்டனர். இதுதான் எம்ஜிஆரின் காதலை மேலும் வலுவடைய செய்ததாம்.

எம்.ஜி.ஆர் மனைவி

தொடர்ந்து, அந்த பெண்ணுக்காக பாட்டு பாடுவதும் அந்த பெண் எம்ஜிஆரினை ஓரக்கண்ணால் பார்ப்பதும் என இவர் காதல் நீண்டு கொண்டே சென்றதாம். அப்போது, இவர் நண்பர்கள் பார்த்துக்கொண்டே இருந்தால் எப்படி அவளிடம் நேரில் பேசி பார் என்றார். இதற்காக ஒரு கடிதத்தினை எழுதி அப்பெண்ணிடம் கொடுத்திருக்கிறார். ஆனால் அப்பெண் எதுவும் பதில் சொல்லவே இல்லையாம். இந்நிலையில், எம்.ஜி.ஆரின் தாயினை நம்பி அப்பெண்ணினை அக்குடும்பத்தார் ஒரு நாள் விட்டு சென்றனராம்.

அன்று எம்ஜி.ஆரினை நள்ளிரவு 2 மணிக்கு சந்தித்த அப்பெண் இந்த காதல் எல்லாம் நடக்காது. நான் தமிழ், நீங்கள் மலையாளி. இனி என் பின்னால் வரவேண்டாம் எனக் கூறி சென்றாராம். இதை கேட்ட எம்.ஜி.ஆருக்கு நிலைமை புரிந்தது. இருந்தும் அதை ஏற்றுக்கொள்ளாமல் தவித்தார். சில நாட்கள் சென்றன. இதை தொடர்ந்து, அப்பெண் இவரினை சந்தித்த செய்தி இரு குடும்பத்திற்கும் தெரிய பிரச்சனை பூதாகரமானது. இதை தொடர்ந்து, எம்.ஜி.ஆர் வீட்டினர் அந்த வீடினை காலி செய்து வந்து விட்டனராம். அவரின் காதலும் அதனுடன் முறிந்ததாக கூறப்படுகிறது.

Next Story