சில்வர் ஜூப்ளி நாயகனின் ‘ஹாரா’ டீசர் வீடியோ.! இனி பாக்ஸ் ஆபிஸ் இவர் கண்ட்ரோல் தான்.!

ஒரு காலத்தில் சில்வர் ஜூப்லி நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் மைக் மோகன். இவர் நடித்த பல திரைப்படங்கள் ரஜினி, கமல் திரைப்பட நடிகர்கள் படங்கள் போல தொடர்ந்து ஹிட் ஆகி வரும் அந்தளவுக்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் மோகன்.

இவர் நடித்தாலும், இவருக்கு குரல் வேறு ஒருவர் தான் கொடுத்து வந்தார். அவருடைய குரல் தான் மைக் மோகனுக்கு செட் ஆகி போனது. அதன் பின்னர் அவருக்கும், மைக் மோகனுக்கும் எதோ கருத்து வேறுபாடு ஏற்படவே, அதன் பின்னர் இருவரும் பிரிந்தனர்.

அதன் பிறகு இவர் சொந்த குரலில் பேசிய படங்கள் சரியாக போகாத காரணத்தால் அதன் பிறகு சினிமாவை விட்டு விலகி விட்டார். தற்போது மீண்டும் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார். மோகன் ஜோடியாக குஷ்பூ நடிக்கிறார். யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இதையும் படியுங்களேன் - அங்கிட்டு வேணாம், இங்கிட்டு போவோம்.! விஜய் கதையை விக்ரமிடம் கூறிய இயக்குனர்.!?

இப்படத்திற்கு ஹரா எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை விஜய் ஸ்ரீ ஜி எனும் இயக்குனர் இயக்கி உள்ளார். இப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. அதில், மோகன் ஆட்டோவில் வருகிறார். அவரை ரவுடி கும்பல் துரத்துகிறது. அப்போது அவர்களுக்கே தெரியாமல் அவர் மீது பெட்ரோல் வீசி விடுகிறார் அந்த வாசனை கூட தெரியாமல், சிகெரெட் பற்றவைக்கிறான் அந்த ரவுடி, உடனே அவன் உடல் பற்றிக்கொள்கிறது. அத்துடன் அந்த டீசர் முடிகிறது.

இதனை கண்ட ரசிகர்கள் , அந்த விடியோவுக்கு கீழே பல கமெண்ட்களை பகிர்ந்து வருகின்றனர். அதில், மிக் முக்கியமாக மீண்டும் சில்வர் ஜூப்லி நாயகன் தமிழ் சினிமாவில் களமிறங்கிவிட்டார் என்ற கமெண்ட் தான் அதிகமாக வந்துள்ளது.

Related Articles
Next Story
Share it