
Cinema News
மீண்டும் எண்ட்ரி கொடுக்கும் மைக் மோகன்… அவருக்கு ஏத்த தலைப்பு……
80களில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் மோகன். இவர் நடித்த பல திரைப்படங்கள் வெள்ளி விழா படங்களாகும். இவரின் படங்களுக்கு இவர் நடித்த படங்களே போட்டியாக இருந்த காலமும் உண்டு. இவரின் திரைப்படங்களில் இளையராஜா இசையமைத்த பாடல்கள் அனைத்தும் தித்திக்கும் தேன் சுவையாக இருக்கும்.
முன்னணி நடிகராக வலம் வந்த மோகன் திடீரென நடிப்பதை நிறுத்திக்கொண்டார். சில படங்களில் நடித்தார். ஆனால், அவை பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. கடந்த 15 வருடங்களாக அவர் எந்த படத்தில் நடித்திருக்கவில்லை. குணச்சித்திர வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும் ‘நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன்’ என்பதில் உறுதியாக இருந்தார்.
இந்நிலையில், தற்போது அவர் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளர். விஜய் ஸ்ரீ என்பவர் இயக்கும் புதிய படத்தில் அவர் ஹீரோவாக ரீ எண்ட்ரி கொடுக்கவுள்ளார். இப்படத்தின் தலைப்பு வருகிற ஜனவரி 1ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பொங்கல் பண்டிக்கைகு பிறகு துவங்கியுள்ளது. இப்படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஏற்கனவே ‘தாதா 87’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து சமூக வலைத்தளங்களில் 80 கிட்ஸ் பலரும் இதற்கு வரவேற்பை தெரிவித்துள்ளனர்.