கோடிலாம் இல்ல.. கோட் படத்தில் மைக் மோகன் சம்பளமே இவ்வளவுதான்!...
Goat Movie: 80களில் பிரபல ஹீரோவாக இருந்த மைக் மோகன் விஜயின் கோத் திரைப்படத்தில் வில்லனாக நடித்தார். அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்து இருக்கிறது.
கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்த திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பு செய்திருந்தார். படத்தில் விஜயுடன், பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர்.
இதையும் படிங்க: தீபாவளி வேணாம்… இந்த வைரலயே ஹிட்டடிச்சிரலாம்… ஜெயம்ரவியின் பிரதர் ரிலீஸ் தேதி இதானாம்!
இப்படத்தில் பல வருடங்களுக்கு பின்னர் மைக் மோகன் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருக்கிறார். எப்படி செட்டாகும் என ரசிகர்களிடம் கேள்வி எழுந்த நிலையில் தன்னுடைய கதாபாத்திரத்தை அச்சிபிசிறாமல் கொடுக்க வேண்டியதை சரியாக கொடுத்திருக்கிறார்.
விஜய் இப்படத்தில் அப்பா மற்றும் மகன் என இரு வேடங்களில் நடித்திருக்கிறார். மகனாக நடித்த விஜய்தான் படத்தில் முக்கிய வில்லன் வேடம் ஏற்றிருந்தார். அதனால் இப்படத்தில் மைக் மோகனுக்கு காட்சிகள் ரொம்பவே குறைவாக கொடுக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: மாநாட்டிற்கு வந்த சிக்கல்! எப்படிப் போனாலும் முட்டுதே.. சிக்கலில் விஜய்
கிளைமாக்ஸில் கூட அவருக்கு சரியான வலு இல்லாததும் படக்குழு அவரை சரியாக பயன்படுத்தவில்லை என்ற விமர்சனங்களையும் பார்க்க முடிந்தது. இருந்தும் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் நடித்து வரும் மைக் மோகனுக்கு சம்பளமாக 40 லட்சம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இப்படத்தில் ஒற்றை பாடலுக்கு நடனமாடிய திரிஷாவிற்கு 5 கோடிகளும், முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் பிரசாந்துக்கு 5 கோடிகளும் சம்பளம் கொடுக்கப்பட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. தற்போது வில்லன் வேடத்திற்கு மோகனுக்கு கோடிகள் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அது லட்சத்தில் மட்டுமே முடிந்ததாக தகவல்களும் தெரிவிக்கிறது.