More
Categories: latest news television

சமையல்னா என்னனு தெரியாது! ஆனால் டைட்டில் வின்னர் – ‘குக்வித் கோமாளி’யில் மைம் கோபியின் வெற்றிக்கான ரகசியம்

மைம் கோபி ஒரு இந்திய திரைப்பட நடிகரும் சிறந்த ஸ்டண்ட் கலைஞரும் ஆவார். வெள்ளித்திரைக்கு வருவதற்கு முன்பே சின்னத்திரையில் ஜொலித்தவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி பகுதி1ல் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். அதனை தொடர்ந்து மைம் நிகழ்ச்சிகள் பலவற்றையும் நடத்தியிருக்கிறார்.

அதற்காக சொந்தமாக ஒரு நிறுவனத்தையே வைத்திருக்கிறாராம் மைம் கோபி. பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் தன் சொந்த வாழ்க்கையில் பல பேரின் உதவிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

Advertising
Advertising

இதையும் படிங்க : ரஜினியை பார்த்துகொள்ள போய் விஜயகாந்துக்கு வந்த சினிமா ஆசை!.. இப்படி ஒரு பிளாஷ்பேக் இருக்கா!..

அந்த வகையில் மைம் கோபியும் சமூக பொது நலத் தொண்டுகள் பலவற்றிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறாராம். இந்த நிலையில் திடீரென யாரும் எதிர்பார்க்காத ஒரு என்ரியை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மைம் கோபி கொடுத்தார்.

ஆனால் அவருக்கு சமையல் என்றால் அறவே தெரியாதாம். இதை பற்றி பிரபல சினிமா தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் மைம் கோபியிடம் கேட்டாராம். சமையலே தெரியாது. அப்புறம் எப்படி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வம் வந்தது என்று.

அதற்கு மைம் கோபி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என எண்ணியே கலந்து கொண்டாராம். அதுமட்டுமில்லாமல் அந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு கிடைத்த 5 லட்சத்தையும் புற்று நோயாளிகளின் மறுவாழ்வுக்கு கொடுத்து விட்டாராம் மைம் கோபி.

இதையும் படிங்க : ஆசை நிறைவேறினாலும் பாக்கக் கொடுத்து வைக்கல! மறைந்தும் மக்கள் மனதை வென்ற விவேக்

பரிசுத்தொகை கிடைத்த பிறகு தான் இந்த ஐடியா வந்ததா? என சித்ரா லட்சுமணன் மைம் கோபியிடம் கேட்க, அதற்கு அவர் அந்த புற்று நோயாளிகளின் நலனுக்காகவாவது நான் வெற்றி பெற வேண்டும் என நினைத்தே தான் அதில் கலந்து கொண்டாராம்.

இந்த ஒரு எண்ணம் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மைம் கோபியால் டைட்டில் வின்னர் விருதை பெற முடிந்தது என சித்ரா லட்சுமணன் கூறினார்.

Published by
Rohini

Recent Posts