அகில உலக சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு வந்த பங்கம்… மிர்ச்சி சிவா எடுத்த அதிரடி முடிவு..
அகில உலக சூப்பர் ஸ்டார்! என்ற டைட்டிலோடு வலம் வரும் நடிகர் மிர்ச்சி சிவா, தனது தனித்துவமான நகைச்சுவை கொண்ட பாடி லேங்குவேஜ்ஜால் பலரையும் ரசிக்க வைப்பவர்.
மிர்ச்சி சிவா தற்போது “சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் ஃபோன் சிம்ரனும்”, “காசேதான் கடவுளடா”, “சுமோ”, “கோல்மால்” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இத்திரைப்படங்கள் விரைவில் திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.
இதனை தொடர்ந்து இயக்குனர் ராம் இயக்கும் புதிய திரைப்படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இயக்குனர் ராம் மிகவும் சீரீயஸான கதையம்சம் கொண்ட திரைப்படங்களைத்தான் இயக்குவார். ஆனால் மிர்ச்சி சிவாவோ காமெடியில் கலக்குபவர். ஆதலால் இந்த காம்போ ஒரு வித்தியாசமான காம்போவாக இருப்பதாக ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். ஒரு வேளை இத்திரைப்படம் காமெடி திரைப்படமாக இருக்கலாமோ என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இந்த நிலையில் தற்போது இத்திரைப்படம் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தில் மிர்ச்சி சிவா மிகவும் சீரீயஸான ரோலிலேயே நடிக்கிறாராம். மேலும் இதில் ஒரு சிறுவனுக்கு தந்தையாகவும் நடிக்கிறாராம் மிர்ச்சி சிவா.
மிர்ச்சி சிவா எப்போதும் தனது பெயருக்கு முன்னால், அகில உலக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை நகைச்சுவையாக போட்டுக்கொள்வார். ஆனால் இத்திரைப்படத்தில் மிர்ச்சி சிவா சீரீயஸான ரோலில் நடிக்கவுள்ளார் எனும்போது அகில உலக சூப்பர் ஸ்டார் பட்டம் இடம்பெறுமா? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
இதையும் படிங்க: வாரிசு பட நடிகரை வம்பிழுத்த தயாரிப்பாளர்… உள்ளே புகுந்து மிரட்டிய கேப்டன்… என்ன நடந்தது தெரியுமா?