சூப்பரா?.. சூர மொக்கையா?.. மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’ படம் எப்படி இருக்கு?.. விமர்சனம் இதோ!..

by Saranya M |
சிவா
X

அகில உலக சூப்பர் ஸ்டார் என தமிழ்ப்படத்தில் ரஜினிகாந்தை ட்ரோல் செய்ய சிவாவுக்கு பட்டம் கொடுத்து பாட்டு வைத்த நிலையில், சிவாவுமே அவரை அப்படித்தான் அழைத்து வருகிறார். கடைசியாக சிவா நடிப்பில் வெளியான எந்தவொரு படங்களும் சரியாக ஓடாத நிலையில், சுமோ படம் அவருக்கு கம்பேக் கொடுத்ததா? அல்லது ரசிகர்களுக்கு தலைவலி கொடுத்ததா? என இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

விடிவி கணேஷ் நடத்தும் ஒரு உணவகத்தில் வேலை பார்த்து வரும் சிவா ஒரு நாள் கடலில் கரை ஒதுங்கி உயிருக்குப் போராடி கொண்டிருக்கும் ஒரு சுமோ வீரரை காப்பாற்றுகிறார். தனது உயிரை காப்பாற்றிய சிவாவுக்கு உண்மையான சேவகனாக இருக்க வேண்டும் என நன்றியுணர்வுடன் அவருடன் பழகி வருகிறார்.

சிவா எங்கே சென்றாலும் அவருடனே நிழல் போல சென்று வருகிறார். வணக்கம் சென்னை படத்துக்குப் பிறகு மீண்டும் சிவாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் பிரியா ஆனந்த். பாடல் காட்சிகளில் கவர்ச்சியாகவும் நடிக்கும் போது தனது பக்குவமான நடிப்பையும் வெளிக்காட்டி ஸ்கோர் செய்கிறார்.

தான் காப்பாற்றிய ஜெயண்ட் மனிதன் ஒரு சுமோ வீரர் என்பதை அறிந்துக் கொள்ளும் சிவா அவரை எப்படியாவது ஜப்பானுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக எடுக்கும் முயற்சி நிறைவேறியதா? இல்லையா? என்பதைத் தான் சுமோ படமாக இயக்குநர் எடுத்து வைத்திருக்கிறார்.

ஆனால், காமெடி படம் என சொல்லிவிட்டு கேமியோ ரோலில் யோகி பாபு மற்றும் சதீஷ் எல்லாம் படத்துக்குள் வந்து சென்றாலும், தியேட்டரில் கடைசி வரை ரசிகர்களால் வாய்விட்டு வயிறு குலுங்க சிரிக்க முடியாமல் எப்போடா படம் முடியும் டைரக்டர் என்னத்த எடுத்து வச்சிருக்காரு என்கிற எண்ணத்துடன் பார்க்கும்படியாகவே உள்ளது.

சிவாவை ஹீரோவாக வைத்து இன்னும் இதுமாதிரி எத்தனை படங்களை எடுத்து ரசிகர்களை கடுப்பேற்றுவார்கள் என தெரியவில்லை என்றும் ரசிகர்கள் திட்டி வருகின்றனர். சுமோவாக நடித்த அந்த ஜப்பான் நாட்டுக்காரர் மனசுக்காக ஒருமுறை பார்க்கலாம்.

சுமோ ரேட்டிங்: 1.5/5.

Next Story