டைட்டானிக் ஹீரோயினின் காதலுக்கு தூது போன மிர்ச்சி சிவா… எல்லாம் நேரம்தான்!!
அகில உலக சூப்பர் ஸ்டார்(!) என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் மிர்ச்சி சிவா, “சென்னை 28”, “சரோஜா”, “தமிழ் படம்”, “கலகலப்பு” போன்ற பல திரைப்படங்களில் தனது நகைச்சுவை கலந்த நடிப்பால் பார்வையாளர்கள் பலரையும் கவர்ந்தார். மிர்ச்சி சிவா தற்போது “சலூன்”, “கோல்மால்”, “சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும்” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சிவா, சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு மிர்ச்சி வானொலி நிலையத்தில் பல வருடங்கள் பணியாற்றினார். ஆதலால்தான் அவரது பெயருடன் மிர்ச்சி என்ற பெயரும் இணைந்துகொண்டது. இந்த நிலையில் தான் மிர்ச்சி வானொலி நிலையத்தில் பணியாற்றியபோது நடைபெற்ற ஒரு நகைச்சுவையான சம்பவத்தை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் சிவா பகிர்ந்திருந்தார்.
“மிர்ச்சி வானொலியில் காதல் டாக்டர் என்ற நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கி வந்தேன். நேயர்களின் காதல் பிரச்சனைகளுக்கு நான் ஆலோசனை கொடுக்க வேண்டும். இதுதான் அந்த நிகழ்ச்சியின் கான்செப்ட்.
இதையும் படிங்க: ஸ்பென்சர் பிளாசாவுக்குள் கோமாளி போல் நுழைந்த அருள்நிதி… இப்படி ஒரு டெடிகேஷனா??
ஒரு நாள் அந்த நிகழ்ச்சியில் பாபு என்ற நேயர், டைட்டானிக் ஹீரோயின் கேட் வின்ஸ்லட்டை காதலிப்பதாகவும், அந்த பெண்ணைத்தான் கல்யாணம் செய்யப்போவதாகவும் கடிதம் அனுப்பினார். மேலும் அந்த நேயர், கேட் வின்ஸ்லட்டையும் அவரையும் எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இவ்வாறு அடிக்கடி அவர் கடிதம் அனுப்பிக்கொண்டிருந்தார்.
ஒரு நாள் நேரலையில் ‘கேட் வின்ஸ்லட் அவர்களே, ஒரு வேளை இந்த நிகழ்ச்சியை நீங்கள் கேட்டுக்கொண்டிருந்தால் உங்களுக்காக சென்னையில் பாபு என்பவர் காத்துக்கொண்டிருக்கிறார்’ என்று வேண்டுகொள் விடுத்தேன். இது போல் பலரும் எனக்கு கடிதம் அனுப்புவார்கள்” என தனக்கு நடந்த நகைச்சுவையான அனுபவத்தை பகிர்ந்திருந்தார்.