“இதில் காமெடி தூக்கலா இருக்கே! வேண்டாம்..” நானும் ரவுடி தான் படத்தில் நடிக்க மறுத்த மிர்ச்சி சிவா..?
மிர்ச்சி எஃப் எம்மில் ஆர் ஜேவாக பணியாற்றிய மிர்ச்சி சிவா, தொடக்கத்தில் “12 பி”, “விசில்” ஆகிய திரைப்படங்களில் சிறிய கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். அதன் பின் வெங்கட் பிரபு இயக்கிய “சென்னை 28” திரைப்படத்தின் மூலம் ஒரு காமெடி ஹீரோவாக அறிமுகமானார்.
அதன் பின் சிவா நடித்த “தமிழ் படம்” அவரை வேற லெவலுக்கு கொண்டு சென்றது. அத்திரைப்படத்தில் இருந்து “அகில உலக சூப்பர் ஸ்டார்”? என்ற பட்டத்தை கைப்பற்றிக்கொண்டார்.
அதன் பின் பல திரைப்படங்களில் காமெடி ஹீரோவாக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் மிர்ச்சி சிவா ஒரு தரமான சம்பவத்தை செய்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, நயன்தாரா, ஆர் ஜே பாலாஜி, பார்த்திபன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்து மாஸ் ஹிட் ஆன திரைப்படம் “நானும் ரவுடி தான்”. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் கதையை முதலில் மிர்ச்சி சிவாவிடம் தான் கூறியிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
ஆனால் மிர்ச்சி சிவா அத்திரைப்படத்தில் நடிக்க மறுத்துள்ளார். இது குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விருது வழங்கும் விழாவில் பேசிய விக்னேஷ் சிவன் அங்கிருந்த சிவாவை பார்த்து “நான் உங்களிடமும் இந்த கதையை கூறினேன். ஆனால் நீங்கள் இந்த கதை காமெடியாக இருக்கிறது சீரீயஸாக இல்லை என கூறி மறுத்துவிட்டீர்கள்” என கூறினார்.
அதற்கு பதிலளித்த சிவா “ஆமாம். அதனை நினைத்தால் இப்போது காமெடியாக இருக்கிறது” என அவரது பாணியில் கலகலப்பாக கூறினார்.