எனக்கு போட்டின்னு யாருமே கிடையாது!.. அகில உலக சூப்பர்ஸ்டார் பட்டம் பற்றி பேசிய சிவா…

Published on: November 26, 2024
mirchi siva
---Advertisement---

ரஜினி, விஜய் ,அஜித் என இவர்கள் சினிமாவில் எத்தனையோ வருடங்கள் போராடி தன் கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் ஒரு உச்சத்தை அடைந்திருக்கின்றனர். அதற்கேற்ப இவர்களுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளமும் அதிகம்தான். ரஜினியை தலைவா என்றும் விஜயை தளபதி என்றும் அஜித்தை கடவுளே என்றும் கூப்பிடும் அளவுக்கு ரசிகர்களை வைத்திருக்கின்றனர்.

இவர்களுக்கு இணையான ரசிகர் பட்டாளத்தை ஒன்றுமே செய்யவில்லை என்றாலும் தன் தனித்துவமான நகைச்சுவையால் தக்கவைத்திருப்பவர் நடிகர் மிர்ச்சி சிவா. இவருடைய கவுண்டர்களுக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ்கள் இருக்கிறார்கள். மற்ற எந்த நடிகர்களுக்கும் கிடைக்காத அங்கீகாரம் மிர்ச்சி சிவாவுக்கு கிடைத்திருக்கிறது. விஜயை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொன்னதும் ஒட்டுமொத்த தமிழகமுமே பொங்கினார்கள்.

இதையும் படிங்க: தென்னிந்திய சினிமாவில் யாரும் செய்திடாத சாதனை!.. 100 மில்லியன்!.. கெத்து காட்டிய சிவகார்த்திகேயன்!..

குறிப்பாக ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தினார்கள். ஆனால் மிர்ச்சி சிவாவுக்கு அகில உலக சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் இருக்கிறது. சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை விட இது பெரியது. ஆனால் இவருக்கு எதிராக எந்த சர்ச்சையும் வரவில்லை. அது ஏன் என்ற கேள்வி மிர்ச்சி சிவாவிடமே கேட்கப்பட்டது.

அதற்கு மிர்ச்சி சிவா சூப்பர் ஸ்டார் என்பது தமிழ் நாடு, இந்தியா இதுக்குள்தான் அடங்கும். ஆனால் அகில உலக சூப்பர் ஸ்டார் என்பது கேலக்ஸி, வேற்று கிரகம் என அந்த மாதிரி நாம் போயிட்டோம். அதனால் அகில உலக சூப்பர் ஸ்டார்னு ஒரே ஒருத்தர்தான். அவர்தான் ரேஸ்ல ஓடிக் கொண்டிருக்கிறார். அவர்தான் லாஸ்ட். அவர்தான் ஃபர்ஸ்ட்.இனி யாரும் வர முடியாது என மிர்ச்சி சிவா கூறினார்.

siva
siva

இதையும் படிங்க: அம்மா, கிரிஷை வீடு மாற்றிய ரோகிணி… கோபியை கேள்வி கேட்ட இனியா… உண்மையை உடைத்த தங்கமயில்…

இதை கேட்டதும் மேடையில் இருந்த அனைவரும் சிரித்தனர். நேற்று சூது கவ்வும் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்தப் படத்தில் மிர்ச்சி சிவாதான் நாயகனாக நடிக்கிறார். செலக்ட்டிவான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் மிர்ச்சி சிவா ஆன்மீகத்திலும் நாட்டம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.