விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியலாக பார்க்கப்பட்டது சரவணன் மீனாட்சி என்ற சீரியல் தான். அந்த சீரியல் கிட்டத்தட்ட 3 சீசன்களாக எடுக்கப்பட்டது. அதில் முதல் சீசனில் மிகவும் பிரபலமானார்கள் மிர்ச்சி செந்தில் மற்றும் நடிகை ஸ்ரீஜா. இருவரின் கெமிஸ்ட்ரி அந்த சீரியலில் மக்களை வெகுவாக கவர்ந்தது.
அதுவும் மதுரை தமிழில் இருவரும் கலக்கியிருப்பார்கள். அந்த சீரியலில் இருவரின் காதலும் அந்த அளவுக்கு பேசப்பட்டது. சொல்லப்போனால் சீரியலில் ஒன்றாக நடித்து வாழ்க்கையில் ஒன்றான ஜோடிகளில் மிர்ச்சி செந்திலும் ஸ்ரீஜாவும் தான் முதலில் ஆணி வேர் போட்டது என்று சொல்லலாம்.
அவர்களை தொடர்ந்து தான் சமீபகாலமாக பல ஜோடிகள் ரீல் ஜோடிகளாக இருந்து ரியல் ஜோடிகளாக மாறி வருகின்றனர். ரேடியோ ஜாக்கியாக இருந்தவர்தான் மிர்ச்சி செந்தில். கேரளாவை சேர்ந்த ஸ்ரீஜா சரவணன் மீனாட்சி சீரியலில் ரொம்பவும் பவ்யமாகவும் அடக்கமான பொண்ணாகவும் வந்து அனைவரையும் கவர்ந்திருப்பார்.
அந்த ஒரு கேரக்டரை நம்பி நான் மோசம் போயிட்டேன் என்று ஒரு பேட்டியில் செந்தில் கூறியிருக்கிறார். அதாவது சீரியலில் அவளின் கதாபாத்திரம் போலத்தான் நிஜத்திலும் இருக்கும் என நினைத்து வாழ்க்கையையே தொலைத்துவிட்டது போல பேசியிருக்கிறார் செந்தில்.
நேரில் ரொம்பவும் ஸ்டிரிட்டான பேர்வழியாக இருக்கிறாராம் ஸ்ரீஜா. அவருக்கு எது பிடிக்குமோ அதுதான் வீட்டில் நடக்குமாம். அதனால் சீரியலில் உள்ள மீனாட்சி இது கிடையாது என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சின்னத்திரை நடிகர்களுக்கும் ஒரு அட்வைஸ் கொடுத்திருக்கிறார் செந்தில்.
இதையும் படிங்க : எந்த பிரச்சினையும் இல்லாம வெளிவந்த ஒரே படம்! அதற்கு காரணமானவரை நிற்கதியில் விட்ட சிம்பு
அதாவது நான் செஞ்ச தப்ப நீங்களும் பண்ணிராதீங்க, கூட நடிக்கும் நடிகைகளை உண்மையான கேரக்டர் தெரியாமல் தயவு செய்து கல்யாணம் பண்ணிக்காதீங்க என்று கூறியிருக்கிறார் செந்தில்.
நடிகர் கவின்…
90களில் தமிழ்…
Soodhu kavvum2:…
அமரன் திரைப்படத்தை…
நடிகர் சிவகார்த்திகேயன்…