பாண்டிச்சேரியில் போய் செய்கிற வேலையா இது!! ஹாலிடே போட்டோ போட்ட நடிகை..
நடிகை மிர்னாளினி ரவி, புதுச்சேரியில் பிறந்த என்ஜினீயரிங் பட்டதாரி. டிக் டாக் செயலியில் இவர் வெளியிடும் விடியோ வைரல் ஆனதால், 2019 ஆம் ஆண்டில், இயக்குநர் "தியாகராஜன் குமாராஜா" இயக்கிய "சூப்பர் டிலக்ஸ்" படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
மிர்னாளினி ரவியின் "வித்தியாசமான முக அழகு மற்றும் துறு துறு குறும்பு புன்னகை" இவருக்கு "சாம்பியன், எனிமி" மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் வாய்ப்புகள் அதிகம் வந்தன.
சமீபத்தில் வெளியான "எனிமி" படத்தில் வந்த "தும் தும்" பாடலில் மிர்னாளினி போட்ட ஆட்டம் இவரை, பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சேர்த்தது.
தற்போது "ஜாங்கோ, கோப்ரா" உள்ளிட்ட படங்களில் நடிக்கும் இவர், சமூகவலைதளங்களில் தொடர்ந்து தனது ஜொலிக்கும் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது புதுச்சேரி சென்றுள்ள மிர்னாளினி "ரிசார்ட் ஒன்றில் பீட்ஸா சாப்பிட்டு மகிழும்" புகைப்படம் லைக்ஸ் அள்ளி வருகிறது.