புருஷன், புள்ளைங்க வரிசையா இறந்தாங்க..! வாழ்க்கையே வெறுத்துடுச்சு… கண்ணீர் வடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் அம்மா!..

பிரபலங்களாக இருந்தாலும், சாதரண மனிதர்களாக இருந்தாலும் அனைவரது வாழ்க்கையிலும் பிரச்சனைகள் இருக்கும். சினிமாவிற்கு வந்த பிறகு கூட வாழ்க்கையில் நிம்மதி கிடைக்காமல் இருந்த பிரபலங்கள் தமிழ் சினிமாவிலேயே உண்டு.

அதே சமயம் சினிமாவிற்கு வருவதற்கே படாத பாடு பட்ட பிரபலங்களும் உண்டு. தற்சமயம் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷும் கூட அப்படியான கஷ்டங்களை அனுபவித்தவரே. சினிமாவிற்கு அறிமுகமானபோது கருப்பாக இருப்பதால் அதிகமாக கேளிக்கு உள்ளானார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஆனால் அதற்கு இடையேயும் தனது தனிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்தான் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அவருக்கு மொத்தம் மூன்று அண்ணன்கள். அவர்கள் எல்லாம் சிறு வயதாக இருக்கும்போதே அவரது அப்பா இறந்துவிட்டார். பிறகு அவரது அம்மாதான் அனைவரையும் வளர்த்துள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் பேசும்போது சில விஷயங்களை பகிர்ந்திருந்தார்.

ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை இறந்த சில காலங்களுக்கு பிறகு காதல் தோல்வி காரணமாக அவரது அண்ணன் தற்கொலை செய்துக்கொண்டு இறந்துள்ளார். அதற்கு பிறகு அவரது இன்னொரு அண்ணனும் ஒரு விபத்தில் இறந்துள்ளார். தொடர்ந்து வாழ்க்கையில் துன்பத்தை மட்டுமே சந்தித்து வந்துள்ளனர் ஐஸ்வர்யா ராஜேஷின் குடும்பத்தினர்.

இனி வாழ்க்கையே அவ்வளவுதான் என அவரது தாயார் நினைத்துக்கொண்டிருந்த தருணத்தில் சினிமாவில் வாய்ப்பை பெற்று தனது குடும்பத்தையே உயர்த்தியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதை அவரது அம்மா பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

இதையும் படிங்க:டிரஸல்லாம் கழட்டிட்டு தான் விட்டாங்க!.. அஜித் படத்தில் பட்ட அவமானங்களை கண்ணீருடன் பகிர்ந்த நடிகர்..

 

Related Articles

Next Story