யாரையும் நோகடிக்காத எம்ஜிஆர்.. தன்னை கேள்வி கேட்ட பானுமதியிடம் எப்படி நடந்து கொண்டார் தெரியுமா?..
உலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்த நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் நடிகர் எம்ஜிஆரும் ஒருவர். நாடக மேடையிலும் கொடிகட்டி பறந்தார் எம்ஜிஆர். நாடகத்துறையில் அவர் நாட்டிய வெற்றி சினிமாத்துறைக்கு இட்டுச் சென்றது.
ஆரம்பத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த எம்ஜிஆர் ராஜகுமாரி படத்தின் மூலம் ஹீரோவாக நடித்தார். சினிமாவில் தனக்கு ஒர் சிறந்த அந்தஸ்து வந்தபிறகு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார் எம்ஜிஆர். இல்லாதோருக்கு வாரி வழங்கும் வள்ளலாக இருந்தார்.
இதையும் படிங்க : “விக்னேஷ் சிவனுக்கும் த்ரிஷாவுக்கும் ஏற்பட்ட வாய்க்கால் தகராறு”… அந்த படத்தில் இருந்து விலகியதற்கு இதுதான் காரணமாம்!!
இதுமட்டுமில்லாமல் யாரையும் எதற்காகவும் கடிந்து பேசதாவரும் கூட. ஆனால் கண்ணுக்கு முன்னாடி ஏதாவது அநீதி நடக்குமானால் அவரின் ராமாவரம் தோட்டத்தில் சம்பந்தப்பட்டவருக்கு விருந்தே கொடுப்பார் என்ற தகவல் அப்பொழுதே இருந்தே பரவி வரும் செய்தியாகும். இதுவரை எம்ஜிஆரை யாரும் நேருக்கு நேராக எதிர்த்து பேசியதும் இல்லை. அந்த அளவுக்கு சினிமாவிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி ஒரு பெரிய மரியாதையே இருக்கிறது.
இந்த நிலையில் எம்ஜிஆர் இயக்கி தயாரித்த படமான நாடோடி மன்னன் திரைப்படத்தில் எம்ஜிஆருக்கும் பானுமதிக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் அவர் பாதியிலேயே படத்தில் இருந்து விலகினார். அப்படி என்ன கருத்து வேறுபாடு என்று நினைக்கும் போது அது சம்பந்தப்பட்ட செய்தி ஒன்று இணையத்தில் வைரலானது.
எம்ஜிஆரை பொறுத்தவரைக்கும் அவர் இயக்கும் படமென்றால் அந்த காட்சி நன்றாக வரும் வரை திரும்பி திரும்பி எடுப்பாராம். அப்படி தான் நாடோடி மன்னன் படத்திலும் பானுமதி சம்பந்தப்பட்ட காட்சிகள் திரும்பி திரும்பி எடுக்கப்பட கடுப்பாகி போன பானுமதி ஏன் இப்படி ஒரே காட்சியை மாறி மாறி எடுக்கிறீர்கள் என்று கேட்டாராம்.
இதையும் படிங்க : என்னோட ரீஎன்ரி விஜய்க்கு சேலன்ஞ்சா இருக்கும்!.. ‘காதலுக்கு மரியாதை’ படவாய்ப்பை தவறவிட்ட ஆதங்கத்தில் பிரபல நடிகர்..
அதற்கு எம்ஜிஆர் இந்த படத்தின் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் நான் என்ன நினைக்கிறேனோ அது சரியாக வரும் வரை காட்சியை படமாக்கிக் கொண்டே இருப்பேன். என்று கூற இருவருக்கும் சிறிய கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. அதனால் தான் பானுமதி சம்பந்தப்பட்ட காட்சிகளை பாதியிலேயே அவர் மரணமடையும் மாதிரியாக சித்தரிக்கப்பட்டு அதன்பிறகு சரோஜா தேவி படத்தில் நாயகியானார்.
ஆனாலும் எம்ஜிஆரும் இதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் நாடோடி மன்னன் படத்தின் வெற்றிவிழாவில் பானுமதிக்கும் அழைப்பு விடுத்து அவருக்கும் விருது கொடுத்து கௌரவித்திருக்கிறார். மேலும் எம்ஜிஆர் முதலமைச்சர் ஆனதும் பானுமதிக்கு கலைமாமணி விருதும் வழங்கி சிறப்பித்தார்.